இந்தியாவில் விநாயகரை எந்த செயலை செய்வதற்கு முன்பும் வணங்குவது மரபாக இருக்கிறது. விநாயகர் கல்வி, அறிவு, ஞானம், வெற்றி ஆகியவற்றை அளிக்கின்றவராக இருக்கிறார். நவ கிரஹங்களில் விநாயகர் கேதுவின் அதிபதி என்று ஜோதிடம் சொல்கிறது. விநாயகர் உருவான காரணத்தை சிவபுராணம் சொல்கிறது. பார்வதியின் நண்பர்களான ஜெயன் விஜயன் என்கிற இருவர், கைலாயத்தில் நந்தி தேவர் உட்பட எல்ல கணங்களுமே சிவனின் ஆணையை தான் பின்பற்றுகிறார்கள், பார்வதியின் ஆணையை பின்பற்ற ஒருவர் வேண்டும் என்று அறிவுரை சொல்கின்றனர்.
அதனால் பார்வதியே தன உடலில் இருந்து விநாயகரை உருவாக்குகிறார். சிவா புராணத்தில் சொல்லப்பட்ட படி விநாயகரின் நிறம் சிவப்பு மற்றும் பச்சையாக இருந்தது. ப்ரம்மவர்த்த புராணத்தில் பார்வதி தேவி தனக்கு ஆண் குழந்தை வேண்டி தவம் இருந்த போது மகாவிஷ்ணுவே விநாயகராக வந்ததாக கூறுகிறது.
ப்ரம்மவர்த்த புராணத்தின் படி, எல்லா தேவர்களும் கடவுள்களும் நவ கிரஹங்களும் விநாயகரை வாழ்த்தி ஆசீர்வதித்தார், அனால் சனி பகவான் மட்டும் கீழே குனிந்த வண்ணம் இருந்தார். இதற்கான காரணத்தை கேட்ட போது நான் நிமிர்ந்து பார்த்தால் விநாயகன் தன் தலையை இழந்து விடுவார் என்று கூறினார், அனால் பார்வதியோ அதை பற்றி கவலைப்படாமல் நிமிர்ந்து பார்க்க சொன்னார். பார்வதியின் சொல்லை தட்ட முடியாமல் நிமிர்ந்த பார்த்தார் சனி பகவான். அடுத்த நொடியே விநாயகனின் தலை அழிந்தது.
அந்த நேரத்தில் வடக்கு பக்கமாக கருட வாகனத்தில் சென்று கொண்டிருந்த மஹாவிஷ்ணு புஷுபாட்ரா நாடியின் கரையில் ஒரு பெண் யானை தன் கன்று உடன் உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு அந்த யானையின் தலையை துண்டித்து வந்து விநாயகருக்கு பொருத்தி உயிர் பெற வைத்தார். விநாயகரின் உடல் பாகம் இப்படி அளித்ததற்கு சிவனுக்கு சூரியனின் தந்தை தந்த சாபமே என்று புராணங்கள் சொல்கின்றன, ஒருமுறை சூரியனை திரிசூலத்தால் தாக்கியதால், சூரியனின் தந்தை மனம் கொதித்து சிவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இவ்வாறு நிகழும் என சாபம் அழித்ததாக கூறப்படுகிறது. மஹாபாரதத்தை எழுதியவரும் விநாயகர்தான். சிவ கணங்களின் தலைவன் என்பதால் இவருக்கு கணேசன் மற்றும் கணநாதன் என்ற பெயர்கள் வந்தன.