நீரில் மூழ்கிய கோவில், அணையாமல் எரிந்த அதிசய தீபம். அசலதீபேஸ்வரர் ஆலயம் !

Update: 2021-11-23 00:30 GMT

அசல தீபேஸ்வரர் ஆலயம் அதிசயங்கள் நிறைந்த திருத்தலங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழகத்தின் மாவட்டத்தில் மோகனூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவரை அசல தீபேஸ்வரர் என்றும் குமரீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். அன்னையின் பெயர் மதுகர வேணி அல்லது குமராயீ. தேவாரத்தில் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது.

கைலாயத்தில் நாரதர் மாங்கனி கொடுக்க முருக பெருமானுக்கும் விநாயகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, முருகன் கோபம் கொண்டு தென் திசை நோக்கி கிளம்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அம்பிகை. கோபத்தோடு செல்லும் மகனை அழைக்கும் விதமாய் மகனே என்ற அழைத்தார். தாயின் குரல் கேட்டு முருகன் நின்றார். மகனே என்றழைத்து முருகன் நின்ற ஊர் என்பதால் மகனூர் என்று முன்னொரு காலத்தில் வழங்கி வந்த இடம். பின்னாளில் மருவி மோகனூர் என்றானது. அதன் பின் அவர் அங்கிருந்து பழனி மலை நோக்கி சென்றார் என்பது புராணம். இருப்பினும் மகனே என்றழைக்க அவர் நின்ற ஊர் என்பதாலே இங்கே முருகனுக்கென்று தனி கோவில் உண்டு.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்பது சிவன் மேற்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கியும் காட்சி தருவதாகும். மேலும் இங்கே சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவரது சன்னதியில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அணையா தீபம் ஒன்று உண்டு. இந்த தீபம் ஆடாமல், அசையாமல் மிகவும் உறுதியாக நிலையாக எறிகிறது. இதன் சுடர் மிகவும் அசலமானது என்பது நம்பிக்கை. அதனாலேயே இந்த பெருமானுக்கு அல்லச தீபேஸ்வரர் என்று பெயர். மேலும் இங்கு ஏற்றப்படும் தீபம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு முந்தைய நட்சத்திரமன பரணி நட்சத்திர நாளில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பரணி தீபம் என்று பெயர். திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாளில் இங்கு ஏற்றப்படும் பரணி தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது.

மேலும் வரலாற்றில் சொல்லப்படும் மற்றொரு குறிப்பு யாதெனில், முன்னொரு காலத்தில் காவேரியில் வெள்ளம் திரண்டு வந்த போது இந்த கோவில் வெள்ளத்தில் மூழ்கியது என்றும். அப்போது வெள்ள நீர் வடிந்த பின் பக்தர்கள் இக்கோவிலுக்கு திரும்ப வந்த போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக அந்த அணையா விளக்கு உறுதியோடு எரிந்து கொண்டிருந்தது இறைவன் நிகழ்த்திய லீலை மற்றும் நம் மூத்தோர்களின் அறிவார்ந்த கட்டிடக்கலை இந்த அதிசயத்தை நிகழ்த்தியதால் இந்த பெருமானுக்கு அசல தீபேஸ்வரர் என்று பெயர் வந்தது எனவும் கூறுவர்.

Image : Dinamani

Tags:    

Similar News