முனிவரின் சாபத்தால் சிறகினை இழந்ததா யானைகள்? ஐராவதம் பிறந்த கதை

Update: 2021-02-28 00:00 GMT

ஐராவதம் என்பது யானைகளின் அரசன். இந்திர பகவானின் வாகனம். இவர் நீரிலிருந்து உருவானவர். அதாவது அமிர்தம் வேண்டி கடலை கடைந்த போது கிடைத்தவைகளில் ஐராவதமும் ஒன்று. அதனாலே இதன் பெயர் ஐராவதம். இதன் பொருள் நீரிலிருந்து உதயமானவர்.

பிரபஞ்சத்தில் எட்டு திசைக்கு அதிபதியாக இருப்பவர்கள் பின்வருமாரு கிழக்கு – இந்திரர், தென்கிழக்கு அக்னி, கிழக்கில் யம தேவர், தென்மேற்கில் சூர்ய தேவர், மேற்கில் வருண பகவான், வடமேற்கில் வாயு, வடக்கில் குபேரர், வடகிழக்கில் சோமேஸ்வரர்


இதில் அனைவருக்கென்றும் பிரதிநிதியாக ஒரு யானை உண்டு. உதாரணமாக, மேகங்களின் பிரதிநிதியான அர்த மாத்தாங்கா. சூரியனின் சகோதரரான அர்க சோதரா, எதிரிகளும் போரிடும் யானையாக நாக மாலா மற்றும் ஐராவதத்தின் மனைவியாக அபராமு.

விஷ்ணு புராணத்தின் படி யானைகளின் அரசராக ஐராவதத்தை நியமித்தவர் ப்ரித்து. ஐராவதம் குறித்து சொல்லப்படும் மற்றொரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில், ஐராவதத்திற்கும் அதனோடு இருந்த மற்ற யானைகளுக்கும் சிறகுகள் இருந்தன. அதற்கு பறக்கும் தன்மை உண்டு.

ஒரு நாள், அவை பறக்கையில் எதேர்ச்சையாக மரம் ஒன்றில் மோதிய போது, அந்த மரத்தடியில் தியானத்தில் இருந்த ஒரு சாதுவின் மீது ஒரு கிளை முறிந்து விழுந்ததில் அவர் சினமுற்று யானைகளுக்கு சிறகுகள் இல்லாமல் போகட்டும் என சபித்ததாக சொல்லப்படுகிறது.


கும்பகோணத்தில் அமைந்துள்ள தாராசுரம் எனும் இடத்தில் சிவபெருமானை ஐராவதம் வணங்கியதாக வரலாறு உண்டு. அதனாலேயே அது வழிபட்ட தலம் ஐராவதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு தக்க உதரணமாக திகழ்கிறது.

முனிவர் துர்வாசர் அவர்களின் சாபத்தால் தன்னுடைய நிறத்தை இழந்து தவித்த ஐராவதம், இந்த கோவில் குளத்தில் மூழ்கி புனித நீராடியதில் தன் நிறத்தை திரும்ப பெற்றதாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த கோவிலின் வளாகத்தினுள் ஐராவதத்தின் படம் இருப்பதை காண முடியும்.

ஐரவாதத்தை தாய்லாந்து நாட்டில் ஈரவான் இவருக்கு சமயத்தில் மூன்று தலைகளும் சில சமயம் 33 தலைகளுடனும் காட்சிப்படுத்துவதுண்டு மேலும் இந்த உரு ஆசிய கண்டத்தில் மலேசியா, பர்மா போன்ற இடங்களில் தெய்வீக தன்மையுடன் வணங்கப்படுகிறது.

Tags:    

Similar News