தவளையாக இருந்த சுதாப முனிவருக்கு சாபவிமோஷனம் கிடைத்த அதிசய தலம்!

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில்

Update: 2022-02-01 00:45 GMT

திரு அன்பில் அல்லது சுந்தர்ராஜ பெருமாள் கோவில் தமிழகத்தின் திருச்சியில் அன்பில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்று மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் 108 கோவில்களுள் ஒன்று. இக்கோவிலுக்கு வடிவழகிய நம்பி பெருமாள் கோவில் என்ற பெயரும் உண்டு. இங்கிருக்கும் பெருமாளுக்கு சுந்தரராஜன் என்று பெயர். இலட்சுமி தேவிக்கு சுந்தரவள்ளி என்று பெயர்.faf

இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. பின்னாளில் விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயகர்களால் புணரமைக்கப்பட்டது. கொல்லிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில். முனிவர் சுதாபா மற்றும் பிரம்ம தேவருக்கு சுந்தர ராஜ பெருமாளாக அய்யன் காட்சி கொடுத்த இடம் என்பது வரலாறு. மாசி மாதம் நிகழும் தீர்த்தவாரி திருவிழா மிகவும் பரிச்சியமான திருவிழாவாகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், இத்தலத்தில் சுதாபா முனிவர் தவமியற்றி வந்தார். அவருக்கு நீரிலும், நிலத்திலும் இரண்டிலும் இருக்கும் வல்லமை இருந்தமையால் நீரில் தவமியற்றி வந்தார். அப்போது இவரை காண வந்த துருவாசா முனிவர். இவருக்கு நீருக்கு வெளியே நெடு நேரம் காத்திருந்தார். காத்திருப்பில் ஆத்திரம் அடைந்த துருவாச முனிவர் தண்ணீருக்குள் இருந்த சுதாபா முனிவரை தவளையாக ஆகுமாறு சபித்தார். அதன்படியே சுதாபா முனிவர் தவளையாக ( மண்டுகம்) மாறினார். அப்போது கோபம் தணிந்த துருவாச முனிவர், சுதாப முனிவரை கண்டு, உங்களுடைய முந்தைய கர்ம வினையினாலே இந்த சாபத்தை பெற்றீர்கள். நீங்கள் இங்கேயே மகா விஷ்ணுவை நினைத்து தவமியற்றி வர, ஒரு நாள் உங்கள் முன் மகா விஷ்ணு தோன்றுவார். அப்போது சாப விமோசனம் பெறுவீர்கள் என்றார்.

அதன்படியே தவளையாக ( மண்டுகமாக) நீரினுள் தவமியற்றி வந்தார் சுதாபா முனிவர். அதனாலேயே இன்றும் இந்த தீர்த்தம் மண்டுக தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அவர் தவத்தை மெச்சி மஹா விஷ்ணு சுதாப முனிவருக்கு சுந்தர ராஜ பெருமாளாக காட்சி தந்தார்.

அதுமட்டுமின்றி தான் படைப்பின் கடவுள், அழகாய் படைக்கும் அனைத்திற்கும் தானே அதிபதி என்கிற கர்வம் பிரம்ம தேவருக்கு ஏற்படவே அதனை போக்க மிகவும் அழகான சொரூபம் கொண்ட சுந்தர ராஜராக பெருமாள் இங்கு தோன்றிய போது. அடடா இத்தனை அழகா என்று பிரம்ம தேவர் வியந்த தன் ஆணவத்தை விட்டொழித்தார் என்பது ஐதீகம். இங்கே ஆண்டாள் நாச்சி நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் அரிதான தரிசனத்தை நல்கி அருள் பாலிக்கிறார். எனவே திருமண தடை நீங்க வேண்டும் பக்தர்கள் இங்கே அதிகமாக வருவது வழக்கம்.

Tags:    

Similar News