இக்கோவில் வளாகத்தினுள் ஶ்ரீரங்கம் போன்ற 20 கோவில்களை அமைக்க முடியும் அதிசயம்!

Update: 2021-04-11 00:15 GMT


ஆன்மீகம் சார்ந்த சுற்றுலாவாசிகளின் உலகார்ந்த தெரிவாக இருப்பது, கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில். கட்டிடக்கலையில் பிரமாண்டத்தை கண் முன் நிறுத்துகிறது இந்த கோவில். கெமர் மொழியில், அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோவிலையும் குறிக்கும். இது உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுத் தலமாக போற்றப்படுகிறது.




 


இந்த கோவிலை கட்டியவர் இரண்டாம் சூரிய வர்மன். இந்த கோவில் அந்த மாநிலத்தின் அடையாளமாகவும்,, மாcநில கோவிலாகவும் விளங்குகிறது. கெமர் சாம்ராஜ்யத்தின் அடையாளம். இந்த அங்கர்வாட் கோவில், நகரத்தின் பரப்பளவிலிருந்து சிறிது உயர்த்தப்பட்டு ஒரு தளத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் சைவ கோவிலாக இருந்து, பின்பு சைவ பாரம்பர்யத்தை உடைக்க எண்ணி விஷ்ணுவுக்காக இக்கோவில் அர்பணிக்கப்பட்டது. ஒரு கோவில் இந்துகோவிலாக இருந்து பின்னர் புத்த கோவிலாக மாறிய அதிசயமும் இதுவே ஆகும்.

எங்கு நோக்கினும் கண்கவர் சிற்பங்கள், திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்கலையின் உச்சம் என நம்மை திகைப்பில் ஆழ்த்துகிற வடிவமைப்பு. இந்த கோவில் கிட்டதட்ட 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஆச்சர்யம். இந்த கோவில் வளாகத்தினுள் நம் தமிழகத்தின் ஶ்ரீரங்கம் போன்ற 20 கோவில்களை உருவாக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோவில் முழுக்க குறியீடுகளாலேயே உருவாகியுள்ளது.



கோவிலின் மைய பகுதியில் உள்ள ஐந்து கோபுரங்கள் மேரு மலையின் ஐந்து சிகரங்களையும், இங்கு வடிக்கப்படாத சிலைகளே இல்லையெனலாம்.

சதுர வடிவிலான தூண்கள், அப்சரஸ்கள், விலங்குகள் மீது நடனமாடும் உருவங்கள், சிங்கத்தால் ஆன சிலைகள் படிகட்டுகள். இந்த கோவிலின் வரலாறு மிக அடர்த்தியானது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமான பரிமாணத்தை அடைந்து, 1982 மற்றும் 1992 க்கு இடையே இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோவிலை புதுப்பிக்கும் பணியினை செய்தது அதன் பின் இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா வாசிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இக்கோவில் கம்போடிய நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் இங்கே குவிவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கோவில் கம்போடிய நாட்டின் சின்னமாகவும் உள்ளது.

Tags:    

Similar News