சிவனை வணங்க அஷ்டமி விரதம் உகந்தது ஏன்?

Update: 2021-04-09 00:30 GMT

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதம் அஷ்டமி விரதமாகும். ஒவ்வொறு மாதமும் வரும் அஷ்டமியில் உபவாசம் இருந்து சிவ பெருமானை வழிபட சகல தோஷங்களிலிருந்தும் ஒருவர் விடுபட முடியும் என்று சாஸ்திரம் சொல்கிறது . ஒவ்வொறு மாதமும் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று குறிப்புக்கள் நம் சாஸ்த்திரங்களில் உள்ளன .

மார்கழி மாதத்தில் வரும் கிருஷ்ண பஷத்து அஷ்டமியில் விரதம் இருந்தால் பாபங்கள் விலகும் . தை மாத அஷ்டமியில் பசுவின் நெய்யை மட்டும் அருந்தி விரதம் இருந்தால் பிரம்மஹத்தி போன்ற கொடிய தோஷங்கள் நீங்கும் . மாசி மாதம் பசும்பாலில் பாயாசம் செய்து தட்ஷணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து விரதம் இருந்தால் சொர்க வாசம் கிட்டும் .



பங்குனி மாதம் எள்ளு பொடியை மட்டும் உண்டு உபவாசம் இருந்தால் வாழ்வின் பிற்பகுதியில் நிம்மதியான வாழ்வு கிடைப்பதுடன் பித்ருக்கள் ஆசியும் கிடைக்கும் . சித்திரை மாதம் வால் கோதுமையால் ஆன உணவை மட்டுமே உண்டு விரதம் மேற் கொண்டால் தர்மங்கள் பல செய்த பலன் கிடைக்கும் . வைகாசியில் வெறும் நீர் அருந்தி விரதம் இருக்கலாம்

ஆனி மாதம் கோமூத்ரம் , ஆடி மாதம் பழங்கள், அவணி மாதம் உப்பு மற்றும் நீர், புரட்டாசியில் தயிர், ஐப்பசியில் வெண்ணீர் , கார்த்திகையில் தேன் ஆகியவற்றை மற்றும் உட்கொண்டு சிவபெருமானை வணங்குபவர்கள் பாவங்கவில் இருந்து விடுபட்டு நற்கதி அடைகிறார்கள்.

மார்கழி அஷ்டமிக்கு சங்கராஷ்டமி என்றும் தை மாத அஷ்டமிக்கு தேவதேவாஷ்டமி என்றும் மாசி மாத அஷ்டமிக்கு மகேசுவராஷ்டமி என்றும் பெயர். பங்குனி அஷ்டமிக்கு திரியம்பகாஷ்டமி என்றும் சித்திரை அஷ்டமிக்கு சனாதனாஷ்டமி என்று பெயர் . வைகாசி அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி , ஆணியில் வரும் அஷ்டமிக்கு பகவ தாஷ்டமி என்றும் பெயர் . நீலகண்டாஷ்டமி ஆடி யிலும் , ஸ்தானு அஷ்டமி ஆவணியிலும் வரும் . சம்புகாஷ்டமி புரட்டாசியிலும் . ஈஸ்வராஷ்டமி ஐப்பசியிலும் , ருத்ராஷ்டமி கார்த்திகையிலும் வரும் . இது போன்று 12 அஷ்டமிகளிலும் விரதமிருந்து பகவானை பூஜிப்பவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று சாஸ்த்திரம் சொல்கிறது .

Tags:    

Similar News