ஐந்து இலட்சம் பக்தர்கள் குவிந்து ஆச்சர்யமூட்டும் பண்ணாரி அம்மன் ஆலயம்!

Update: 2021-11-12 00:30 GMT

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் மிகவும் முக்கியமானது பண்ணாரியம்மன் கோவில். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தமிழ்கத்தின் நாட்டுபுற வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியாம தெய்வம். கொங்கு நாட்டின் அன்னை என்றும் சொல்லலாம்.

இங்கு அமைந்திருக்கும் மூல தெய்வம் சுயம்பு மூர்த்தியாகும். இங்கே திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பகுதி ஒரு காலத்தில் அடர் காடாக இருந்ததாகவும். இங்கு வாழக்கூடிய மக்கள் முன்னொரு காலங்களில் இங்கே ஏராளாமான பசு, புலி ஆகியவற்றை கண்டிருப்பதற்கும் சாட்சிகள் உண்டு. அவ்வாறு பெரும் பசு கூட்டம் இங்கே புல்லை மேய்வது வழக்கம், புல் மேய்ந்த பின் மீண்டும் அதன் கொட்டகைக்கே சென்று தன் முதலாளிக்கு தேவையான பாலை கொடுக்கும்.

இவ்வாறான சூழலில் பெரும் பசுங்கூட்டம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பசு அதன் மெய்ப்பானை பால் கறக்க அனுமதிக்கவில்லை. மற்றும் அதன் கன்றையும் பால் குடிக்க அனுமதிக்கவில்லை. அதன் குணாதிசயங்களில் மாற்றம் இருப்பதை அப்பசுவை அடுத்த நாள் பின் தொடர்ந்த போது, அந்த பசு அதன் கூட்டத்திலிருந்து விலகி சென்று வேங்கை மரத்தின் அடியில் தன்னாலே பால் சுரக்கும் அதிசயத்தை அந்த மெய்ப்பான் கண்டுள்ளான். இந்த செய்தி காட்டுத் தீ போலே அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது.

ஊர் மக்கள் அனைவரும் இந்த அதிசயத்தை கண் கூடாக கண்டதாக சொல்லப்படுகிறது. அந்த வேங்கை மரத்தின் அருகே சென்று பார்த்த போது அங்கிருந்த புற்களை எல்லாம் விளக்கி பார்க்கையில் அங்கே சுயம்பு லிங்கமாக திருவுருவம் இருந்தது. அந்த காட்டு பகுதியை பண்ணாரி என்றழைப்பதுண்டு. இந்த சம்பவம் நிகழ்ந்த போது ஒருவர் மீது அன்னை வந்து தன்னுடைய செய்தியை உலகிற்கு எடுத்துரைத்தாள், அதன் படி இந்த பண்ணாரி எனும் பகுதியில் பண்ணாரி அம்மனாக குடிகொள்ள போவதாகும், அவளுக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் அவள் தெரிவித்தன் பெயரில் இங்கே இன்று ஒரு பிரமாண்ட கோவில் அமைந்துள்ளது.

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக இங்கே நடைபெறும் 20 நாள் பங்குனி விழாவில் நிகழும் குண்டத்திருவிழாவில் 5 இலட்சம் பக்தர்கள் பங்கேற்கும் அதிசயமும் நிகழ்கிறது. பெளர்ணமி நாட்களில் அன்னையின் தரிசனம் காண கூட்டம் நிரம்பி வழிவதை நாம் காண முடியும். இந்த குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இந்நாளில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவதுண்டு.

Image : Justdial

Tags:    

Similar News