குழந்தை பேறு அருளும் அற்புத சக்தி நிறைந்த சட்டீஸ்கர் மாதா பம்லேஷ்வரி

Update: 2022-09-07 00:30 GMT

மா பம்லேஷிவரி திருக்கோவில் சட்டீஸ்கர் மாநிலத்தில், ராஜ்நந்த்கோகன் என்ற மாவட்டத்தில் டோன்கர்கர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மலைக்கோவில், 1600அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை படி பம்லேஷ்வரி என்றும் அழைப்பர். இந்த மலையின் அடிவாரத்தில் மற்றொரு கோவில் அமைந்துள்ளது அதை சோட்டி பம்லேஷ்வரி என்றும் அழைப்பர். நாவராத்திரி திருவிழாவின் போது இந்த கோவில்களை சுற்றி ஆயிரக்கணக்கான மக்களை நாம் காண முடியும். காரணம் நவராத்திரியின் போது ஜ்யோதி கலஷ் என்கிற விளக்கேற்றும் சடங்கு இங்கு வெகு பிரபலமானதாகும்.

ராஜ்நந்தகோகனில் இருந்து 40 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கயிற்றில் இயக்கப்படும் வண்டியின்(ரோப் கார்) மூலம் மலை உச்சிக்கு பக்தர்கள் செல்கின்றனர்., சட்டீஸ்கரில் ரோப் கார் அமைந்துள்ள ஒரே கோவில் இது என்பதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இங்கே வருவது வழக்கம்.

இந்த பகுதி அமைந்துள்ள இடத்தின் பெயர் டோன்கர். மராத்தியில் டோன்கர் என்றால் மலை. கர் என்றால் கோட்டை. எனவே மலைகோட்டை அல்லது மலைவாசம் என்பதை குறிப்பதாக இந்த பெயர் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புராணம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். ஒரு காலத்தி இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா வீரசேனன் எனும் மன்னனுக்கு குழந்தைகள் இல்லை. அப்போது அவனது அவையிலிருந்த அரச அர்ச்சகர்கள் இறைவனுக்கு பூஜை செய்யுமாரு அறிவுருத்தினர்.

அந்த பண்டிதர்களின் ஆலோசனையை ஏற்று நர்மதா நதிகரையில் அமைந்துள்ள மண்டலா நகரில் சிவபூஜை செய்து சிவாலயமும் எழுப்பினான் மன்னன். அதன் பிறகு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் அரசி. அந்த குழந்தைக்கு மதனசேனன் எனவும் பெயர் சூட்டினாள். இது சிவன் மற்றும் பார்வதியின் அருளன்றி வேறல்ல என்று எண்ணிய அரசன் இந்த குன்றின் மீது பம்லேஷ்வரி ஆலயத்தை உருவாக்கினான் என்பது வரலாறு.

இந்த கோவிலில் அனுமருக்கு இரு ஆலயங்கள் உள்ளன. ஒன்று மலையின் மீது இருக்கும் கோவிலில் உள்ளது. மற்றொன்று அடிவாரத்திலுள்ள சோட்டி பம்லேஷ்வரி ஆலயத்தில் உள்ளது. ' மங்கல் கரணி, சங்கட் ஹரணி' என்று இங்கிருக்கும் அம்பாளை போற்றுகின்றனர். இதன் பொருள் மங்களமான நல்லவைகளை பக்தர்களுக்கு கொடுத்து, சங்கடங்களை எடுத்துகொள்ளும் தாய் என்று பொருள்.

குழந்தையில்லாத தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டால் பிரார்த்தனை நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News