தீராத நோய்களை தீர்க்கும் தீர்த்தம்.இந்நீரின் மூலத்தை அறிய முடியா அதிசயம்!
ஶ்ரீ தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்திரம், கர்நாடகா
ஶ்ரீ தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்திரம் என்று பெயர் கொண்ட இக்கோவில் கர்நாடகாவின் கங்கம்மா ஆலயத்திற்கு முன்பாக உள்ளது. இதன் எதிர்புறத்தில் காடு மல்லேஸ்வரா ஆலயம், பெங்களூரூவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு பல பெயர்கள் உண்டு. நந்தி தீர்த்தம், நந்தீஸ்வர தீர்த்தம், பசவ தீர்த்தம் அல்லது மல்லேஸ்வர நந்தி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலின் மூலவர் சிவன் ஆவார். இந்த கோவிலினுடைய தனித்துவம் என்னவென்றால், இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியே ஆவார். இவர் தெற்கு முகத்தை நோக்கி அமைந்துள்ளார். தக்ஷிணம் என்பது கன்னடத்தில் தெற்கு என்பதை குறிக்கிறது. அதானாலேயே இக்கோவிலுக்கு தக்ஷிண முக நந்தி என்று பெயர் வந்துள்ளது.
இந்த நந்தி பெருமானின் அதிசயம் யாதெனில், நந்தியின் வாயிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருக்கிறது. இது புனித நீராக கருதப்படுகிறது. இந்த நந்தியின் வாயிலிருந்து வருகிற தீர்த்தம் சிவலிங்கத்தின்மீது விழுகிறது. பின் அந்நீரானது கோவில் குளமான கல்யாணி என்ற இடத்தில் கலக்கிறது.
நந்தியின் வாயிலிருந்து வருகிற இந்த நீர், எங்கிருந்து வருகிறது? இதன் மூலம் என்ன என்பது ஆய்வாளர்களாலும் கூட கண்டு பிடிக்க முடியாத அதிசயம். இதன் மூலத்தை தேடி தோற்றவர்களே அதிகம். இந்த அதிசயத்தை அடுத்து, இந்த கோவிலில் மட்டுமே நந்தி பெருமான் சிவனுக்கு எதிரே அமராமல், சிவனின் சிரசின் மீது இருப்பதை போன்ற அமைப்புப உள்ளது.
இந்த தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுவதால் இத்தீர்த்தத்தை பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இக்கோவிலில் எப்போதும் பெருங்கூட்டம் இருந்த வண்ணமே உள்ளது.
இக்கோவிலின் மூலவர் சிவன் என்பதால், சிவராத்திரி மற்றும் இதர பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோவில் பல ஆயிரம் பழமை வாய்ந்தது என்றும், மிக சமீபத்தில் கண்டறிந்து புதுப்பிக்கும் நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன என்றும் தரவுகள் சொல்கின்றன.
நந்தி பெருமான் சிவனின் வாகனமாக கருதப்படுபவர். அவர் ஏற்றுக்கொள்ளும் தன்மையின் குறியீடு. எனவே சிவனின் அருளை பெற நந்தியின் ஆசியை பெறுவது ஆன்மீகத்தின் முக்கியமாகிறது.