தீபாவளி கொண்டாட்டத்தின் பின்னிருக்கும் ஆச்சர்யமான தகவல்கள்.

Update: 2021-11-04 00:30 GMT

தீமையழிந்து நன்மை பிறந்த தினம் அல்லது அறியாமை இருள் அகன்று ஞானமெனும் வெளிச்சம் வந்த தினம் என தீபாவளிக்கு பின் சொல்லப்படும் தத்துவார்த்தங்கள் சுவாரஸ்யமானவை. தெற்கில் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை வடக்கில் ஐந்து நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதில் முதல் நாள் பண்டிகையை தன்வந்திரி திரியோதசி அல்லது தன்செராஸ் என்கின்றனர். இரண்டாம் நாள் பண்டிகையை நரக சதுர்தசி என்கிறனர். மூன்றாம் நாள் பண்டிகையே தீபாவளி. நான்காம் நாளில் கோவர்தன பூஜை செய்யப்படுகிறது. ஐந்தாம் நாள் பூஜை பாய் தூஜ் என்கிறனர் இது சகோதர சகோதரிக்கு உரியதாகும்.

மேலும் இந்தியாவில் பலவிதமன பின்புலங்கள் இந்த பண்டிகைக்கு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். சுவாரஸ்யமாக மலேசியாவில் தீபாவளியை ஹரி தீபாவளி என்கின்றனர். இந்நாளில் மலேசியாவில் அராசங்க விடுமுறையும் அளிக்கப்படுகிறது. மற்றும் நேப்பாளத்தில் கொண்டாடப்படும் தீபாவளியை திஹார் அல்லது ஸ்வாந்தி என்று அழைக்கின்றனர். அங்கு யம தர்மனை வணங்கும் வழக்கமும் உண்டு, மரணத்தின் தேவதையான யம ராஜரிடம் நீண்ட ஆயுளை வேண்டி பிரார்த்திக்கும் வழிபாடாக செய்யப்படுகிறது

காஷ்மீரத்தின் புராணங்களிலும் இப்பண்டிகை குறித்த குறிப்பு உண்டு. நில்மத புராணம் எனும் புராணத்தில் தீபாவளியை சுக்சுப்திகா என குறிக்கின்றனர். இதன் பொருல் மகிழ்வுடன் நிறைவு கொள்வதாகும். சீக்கியர்களும் இந்த் பண்டிகை முக்கியமானதாகும். அவர்களின் முக்கிய வழிபாட்டு தலமான தங்க கோவில் இது போன்ற ஒரு தீபாவளி நன்னாளில் தான் அடித்தளம் இடப்பட்டது. .

மேலும் வடக்கில் வணிகம் செய்யும் பெரும்பாலனவர்கள் இந்நாளில் புது கணக்கை தொடங்க்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நாளின் வருடத்தின் புதிய கணக்கை தொடங்குவதை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். விநாயகருக்கு பூஜை செய்து இந்த கணக்கை அவர்கள் தொடங்குவது வழக்கம்.

மேலும் செல்வ வளத்தை அள்ளி தரும் இலட்சுமி பூஜை செய்வது மிக முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. தீபாவளி என்பது தனிமனித பண்டிகை அல்ல அது ஒரு சமூகத்தின் பண்டிகை. இந்ந்நாளில் தனி ஒரு நபர் மாத்திரம் மகிழ்வாக இருப்பதில்லை. நம் ஒட்டு மொத்த சமூகமே மகிழ்கிறது. இனிப்புகளை பகிர்ந்தளிப்பதை போலவே நம் இன்பங்களை பகிர்ந்தளிப்போம். இருள் தொலைவதை போலவே நம் துன்பங்களும் தொலைந்து போகட்டும். பட்டாசுகளின் ஒளி வெள்ளம் அனைவரின் வாழ்வில் பாய்ந்தோட தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடுவோம். நம் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை எண்ணி பெருமை கொள்வோம்.

Image : India Gift.

Tags:    

Similar News