இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹொரநாடு எனும் பகுதியில் அமைந்துள்ளது தேவி அன்னபூர்ணேஷ்வரி கோவில். பத்ரா நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோவிலின் முழு பெயர் நீளமானது, ஆதிசக்தியாக ஶ்ரீ அன்னபூர்ணேஷ்வரி கோவில் அல்லது ஶ்ரீ ஷேத்ரா ஹொரநாடு கோவில் என்றும் இது அழைக்கப்படுகிறது.
அன்னபூர்ணி குறித்து சொல்லப்படும் புராணகதைகள் பல்வேறாக காண கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை இரண்டு. ஒரு முறை பார்வதியின் அம்சமாக திகழும் அன்னபூரணிக்கும் சிவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் மாயா, உணவு உட்பட அனைத்தும் மாயா என்று அறிவித்தாராம் சிவபெருமான். உணவு என்பது மாயை அல்ல என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய அன்னை பார்வதி முழுமையாக தன் இருப்பை மறைத்து கொண்டாராம். அவர் முழுமையாக மறைந்த பின்பு, இந்த பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்றுவிட்டது. புல், தாவரம் எதுவும் வளரவில்லை, காற்று இல்லை, அசைவு இல்லை உலகம் ஸ்தம்பித்த நிலையில், தான் சொன்னது சரியல்ல என்று சிவபெருமான் உணர்ந்த பின்னர், கருணை கொண்டு மீண்டும் தோன்றி இந்த உலகிற்கு உணவளித்தார் ஜகன் மாதா என்பது ஒரு புராணக் குறிப்பு.
மற்றொன்று, ஒரு முறை சிவபெருமான் பிரம்ம தேவரின் ஒரு தலைfaயை கொய்து பிரம்மஹஸ்தி தோஷத்திற்கு ஆளானார். அப்போது, அவர் கையோடு ஒட்டிக் கொண்டது. எப்போது அது முழுமையாக உணவால் நிறைகிறதோ அப்போது தான் அவருக்கு சாப விமோசனம் என சொல்லப்பட்ட நிலையில் அய்யனும் பலரிடம் யாசகம் கேட்டார். யாரிட்டும் நிரம்பாத அந்த பாத்திரம், இக்கோவில் குடிகொண்டிருக்கும் தேவி அன்னபூரணி அன்னம் இட்டதால் நிறைந்தது என்றும் அதன் மூலமே சிவபெருமான் சாப விமோசனம் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.
வம்சாவளியாக இக்கோவிலில் தர்மகர்த்தாக்கள் பூஜை செய்து வருகின்றனர். இந்த கோவில் முன்னொரு காலத்தில் மிகவும் சிறிய கோவிலாக இருந்துள்ளது. ஐந்தாம் தர்மகர்த்தாவான ஶ்ரீ.டி.பி. வெங்கட சுப்பு அவர்கள் மீண்டுமொருமுறை அட்சய திருதி நன்நாளில் இக்கோவிலில் புணரமைத்த போதிலிருந்து மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது இத்திருத்தலம்.
அன்னம் என்றால் உணவு, பூர்ணம் என்றால் முழுமை எனவே முழுமையான உணவு என்பதே அன்னையின் திருப்பெயர் காரணம். ருத்ரயமால்யா, அன்னபூர்ணமாலினி நக்ஷத்ர மாலிகா, சிவரஹஸ்யா, மற்றும் அன்னபூர்ண கவசம் ஆகியவற்றில் அன்னபூரணியை போற்றி துதிக்கும் பாமாலைகள் இடம் பெற்றுள்ளன.
Image : Chikkamangaluru District