கலியுகம் முடியும் வரை தொடர்ந்து வளரும் அதிசய வரசித்தி விநாயகர் கோவில்!

ஶ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், காணிப்பாக்கம்

Update: 2022-02-04 01:15 GMT

ஶ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் விநாயகருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இக்கோவில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காணிப்பாக்கம் எனும் பகுதியில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 68 கி.மீ தொலைவிலும், சித்தூர் மாவட்டத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் விநாயக பெருமான் சுயம்புவாக அவதரித்தவர்.

இக்கோவிலின் ஆச்சர்யம் யாதெனில், இங்கிருக்கும் விநாயக பெருமான் தினம் தினம் வளர்கிறார். கலியுகத்தின் முடிவு நெருங்கும் வரை அவர் நேரே தரிசனம் இந்த உலகத்திற்கு தரிசனம் நல்கும் வரை வளர்ந்து கொண்டே இருப்பார் என்பது நம்பிக்கை. இங்கிருக்கும் விநாயகர் இக்கோவிலின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் இன்றளவும் அந்த கிணறு இத்தலத்தை இருப்பதையும் காணலாம்.

காணி என்பது நிலத்தின் கால் பாகம் என்று பொருள், பாக்கம் என்பது நீர் பாயும் இடம், நீர் பாயும் இடமாக இந்த பகுதி இருந்தமையால் காணிப்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், முன்னொரு காலத்தில் வாய் பேச முடியாமல், காது கேளாமல், கண் பார்வை இல்லாமல் இருந்த மூன்று சகோதரர்கள் விநாயக பெருமானின் பக்தர்களாக இருந்தனர். அவர்கள் நீர் வேண்டி கிணறு வெட்டிய போது, அவர்கள் கிணறு வெட்ட பயன்படுத்திய ஆயுதம் ஒரு பொருளின் மீது பட்டது. அந்த பொருளில் இருந்து இரத்தம் பீறிட்டு வடிவதை கண்டனர். இதனை கண்ட ஊர் மக்கள் அந்த பகுதியை நன்றாக தோண்டி பார்த்த போது அது விநாயகரின் திருவுருவம் என்பதை கண்டுபிடித்தனர். அந்த விநாயகரே இன்றளவும் அருள் பாலிக்கிறார் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமின்றி ஒருவர் வாக்கின் உண்மை தன்மை இக்கோவிலில் நிருபிக்கப்படும் ஆச்சர்யமும் இங்கே நிகழ்கிறது. இருவரில் யார் ஒருவர் உண்மை சொன்னதை நிருபிக்க முற்படுகிறாரோ, அவர் இக்கோவில் தீர்த்தத்தில் நீராடி, இறைவன் முன்பு தான் செய்த உண்மையை ஒப்பு கொண்டு, தன் மேல் சுமத்தப்பட்ட பழியை இல்லையென நிருபிக்கும் சடங்கும் இங்கே நிகழ்கிறது. 21 நாட்கள் நிகழும் பிரமோற்சவ திருவிழா இப்பகுதியின் மிக பரிச்சியமான விழாவாகும்.

Tags:    

Similar News