ஆயிரமாண்டு அதிசயம் வாய்ந்த கோவில். லட்சுமி தேவியே வழிபட்ட ஆச்சர்ய ஆலயம்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் கோவில், திருநின்றவூர்

Update: 2022-11-04 00:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூர் கிராமத்தில் அமைந்துள்ளது மகாலட்சுமீஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் இது. இங்கிருக்கும் மூலவருக்கு மகாலட்சுமீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு உலகநாயகி/லோகநாயகி என்றும் பெயர்.

ஆயிரமாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இக்கோவிலில் விஷ்ணு பெருமான், மகாலட்சுமி, மகரிஷி ஜமதக்னி, பரசுராமர், ஐராவதம், இந்திரன் ஆகியோர் இறைவனை இங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில், கந்தர்வன் ஒருவனின் அழகில் மயங்கியதாக குற்றம் சாட்டி ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவியை கொல்லும்படி தங்களின் மகனான பரசுராமருக்கு ஆணை பிறப்பிக்கிறார் ஜமதக்னி. தந்தையின் ஆணையை ஏற்று தாயையே கொல்கிறார் பரசுராமர். பின் செய்த தவறுக்கு வருந்தி இறைவனின் தாய் கொன்ற பழி போக வருந்தி வேண்டிய போது அவருக்கு காட்சி அளித்து அருள் பாலித்த இடம் இது.

அதுமட்டுமின்றி லட்சுமி தேவிக்கு நிரந்தரமாக விஷ்ணு பரமாத்மாவின் நெஞ்சில் குடிகொள்ள விருப்பம். அந்த வேண்டுதலோடு சிவபெருமானை லட்சுமி தேவி வழிபட்ட இடம் இது. லட்சுமி தேவியை திரு என்று அழைப்பது வழக்கம். அதன் படி லட்சுமி தேவி(திரு) நின்ற ஊர் இது என்பதால், இந்த ஊருக்கு திருநின்றவூர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்வர்.

இந்த கோவிலை சுற்றி மூன்று குளங்கள் இருக்கின்றன. அதாவது இந்த கோவிலுக்கு மாலை அணிவிக்கும் வடிவில் இந்த மூன்று குளங்களும் இடம்பெற்றுள்ளது எனவே இந்த குளத்தை சம்பந்தர் நீலமலர் பொய்கை என்று அழைத்து போற்றினார். பிறப்பிலேயே சிவந்த கண்களோடு பிறந்த கோசெங்கண் சோழன் தன்னுடைய அரசாட்சியில் 70 மாடக்கோவில்களை கட்டினான். அதில் ஒன்று தான் இது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நவகிரகங்களில் முக்கியமானவர்களாக கருதப்படும் சந்திரனும் சூரியனும் எதிரே எதிரே பார்த்தபடி இங்கே இருப்பது அரிதினும் அரிதாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் விழாவும், சிவராத்திரி மற்றும் திருகார்த்திகை விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Tags:    

Similar News