நஞ்சுண்டேஸ்வர கோவில் அல்லது ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயம் இது கர்நாடகா மாநிலத்தின் நஞ்சன்கூடு எனும் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் புராதாணமாக வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். க்பிலா நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த தலத்திற்கு தக்ஷிண பிரயாகம் என்ற பெயரும் உண்டு.
பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகாலம் எனும் கொடிய நஞ்சை உண்டதால் நஞ்சுண்டேஸ்வரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். நஞ்சை உண்ட ஈஸ்வரர் வசிக்கும் இடம் (கூடு) என்பதாலேயே இத்தலத்திற்கு நஞ்சன்கூடு என்று பெயர் வந்தது எனவும் சொல்லப்படுகிறது. இங்கு நிகழும் "தொட்டு யாத்ரே " எனும் பெரும் தேர் திருவிழாவில் ஐந்து விதமான தேர்கள் இழுக்கப்படும். இந்த விழாவின் போது இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். 9 அடுக்கு கொண்ட 120 அடி உயரம் உடைய பிரமாண்ட கோபுரம், பார்போருக்கு வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது. மற்றும் இந்த வெளிப்புற வடிவமைப்பை கட்டியவர் மூன்றாம் கிருஷ்ணராஜ் வாடியார் அரசின் இராணி தேவராஜாமணி.
சிவபுராணத்தில் இந்த பகுதி ஶ்ரீ கரலாபுரி என்று அழைக்கப்படுகிறது. கேஷி எனும் அரக்கன் தான் பெற்ற வரத்தால் இந்த உலகையே அச்சுறுத்தி வந்தபோது தேவர்களும் நாரத முனியும் சிவபெருமனிடம் தங்கள் இன்னல் தீர அருள் புரியுமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது இறைவன் இந்த இடத்தில் தோன்றி கேஷி எனும் அரக்கனை அழித்த இடம் இது, மேலும் இந்த இடத்திற்கு பாப விநாஷினி என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் தீய பாவங்களை அழித்தல் என்பதாகும். கபினி ஆற்றங்கரையில் நீராடி இங்கே வழிபடும் ஒவ்வொருவருக்கும் பாப விமோசாம் கிடைக்கும் என்பது நம்பிகை.
முனிவர் பரசுராமர், தன்னுடைய தந்தையின் வார்த்தையை கேட்டு தாயின் தலையை கொய்த பின் இங்கிருக்கும் நஞ்சுண்டேஸ்வரரிடம் தன் பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினார். அப்போது நாரதரின் வழிகாட்டுதல் படி பரசுராமர் மண்டபம் எழுப்பி இறைவனை வணங்க நினைத்தார். அப்போது பரசுராமின் பரசு என்று அழைக்கப்படும் கோடாளி தவறுதலாக சிவபெருமானின் மீது பட்டு அவருக்கு காயம் நேர்ந்தது. அப்போது தான் செய்த தவறுக்காக தன்னயே மாய்க்க துணிந்த பரசுராமர் முன் தோன்றி அந்த பகுதியின் மண் சிறிதினை எடுத்து வைக்க வழியும் இரத்தம் நிற்கும் என கூறி அவர் செய்த பாவங்களில் இருந்து அவருக்கு பாவ விமோசனம் தந்தார் என்பது தல வரலாறு.