திருநெல்வேலி வேணுவனநாதருக்கு நெல்லையப்பர் என்ற பெயர் ஏன்?ஆச்சர்ய தகவல்!

Update: 2022-01-05 00:30 GMT

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலங்களுள் முக்கியமானது திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம். இங்கிருக்கும் சிவபெருமானுக்கு வேணுவன நாதர் மற்றும் நெல்லையப்பர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் அம்பிகை காந்திமதி அம்மன் என போற்றப்படுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தேவாரம் பாட பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று.

ஏராளமான சந்நிதிகளை கொண்ட இந்த கோவில் வளாகம் 14 அரை ஏக்கரில் அமையப்பெற்றது. ஆறு கால பூஜை இக்கோவிலின் வழக்கமாகும். ஆனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா. இதன் ஆதிகால கட்டமைப்பு பாண்டியர்களால் செய்யப்பட்டது என்றும், தற்போதைய அமைப்பு சோழர், பல்லவர் மற்றும் சேர அரசர்களால் செய்யப்பட்டுது என்ற கூற்றும் உண்டு.

முன்னொரு காலத்தில் இந்த இடம் மூங்கில் காடாக இருந்தது. மூங்கிலின் மற்றொரு பெயர் வேணு. எனவே இந்த இடத்திற்கு வேணு வனம் என்றும். இங்கு சுயம்பாக தோன்றிய சிவபெருமானுக்கு வேணுவன நாதர் என்றும் பெயர். அதுமட்டுமின்றி இக்கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு கதை யாதெனில், வேத பட்டர் என்ற ஒருவர் சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். சிவபெருமானுக்கு தவறாது நெய்வேத்தியம் படைத்து வந்தார். அவருடைய பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் அவரை வறுமைக்கு ஆட்படுத்தினார். வறுமயிலும் பிறரிடம் யாசகம் பெற்று வீடு வீடாக யாசகமாய் நெல்லை பெற்று சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் படைத்து வந்தார். ஒரு முறை நெல்லை உலர வைத்து விட்டு குளிக்க சென்ற போது, மழை பொழிந்தது. மழையில் நனைந்தால் நெல் வீணாகி விடுமே என அஞ்சி அவர் அவசரமாக வந்த போது, இறைவனுக்காக வைத்திருந்த நெல் பகுதி மட்டும் வெயிலில் வேலி அமைந்தார் போல மழை பொழியாமல் வெயிலில் உலர்ந்து கொண்டிருந்ததாம். இதனை அரசருக்கு தெரியப்படுத்த அவரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்து வேணு வனம் என்றிருந்த பெயரை நெல்வேலி எனவும், வேணுவன நாதர் என்றிருந்த பெயரை நெல்வேலி நாதார் எனவும் மாற்ற அதுவே மருவி திருநெல்வேலி எனவும் நெல்லையப்பர் ஆலயம் என ஆனதாக ஐதீகம்.

அதுமட்டுமின்றி சிவபெருமான நர்த்தனம் புரிந்த ஐந்து முக்கிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்றும். ஐந்து அம்பலங்களில் இந்த இடம் தாமிர சபை என்றழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News