சேவலை அர்பணித்து உணவு வழங்கினால் எதிரிகள் விலகும் ஆச்சர்ய கேரள ஆலயம்!
பழையனூர் பகவதி கோவில்
பழையனூர் பகவதி கோவில் 500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படும் கோவிலாகும். பதினேழாம் நூற்றாண்டில் அம்பிகை கோவிலுக்குள் குடி கொண்டாள் என்கின்றன குறிப்புகள். கொச்சியின் அரசனாக்க இருந்தவர் இக்கோவிலின் கட்டுமானத்திற்கு உதவியுள்ளார். அம்பிகை மற்றும் ஶ்ரீ விஷ்ணுவிற்கு இங்கே கோவில் இருக்கிறது. அதை போலவே இக்கோவில் வளாகத்தினுள் சிவபெருமானுக்கும் கோவில் உண்டு.
பகவதிக்கு சேவலை அர்பணிப்பதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அம்பிகைக்கு சேவலை அர்பணித்து அதற்கு உணவளிப்பதால் தங்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. முன்னொரு காலத்தில் இந்த பகுதி ஓர் அரக்கனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரக்கனின் அட்டூழியத்தில் ஊர் மக்கள் மிகவும் துன்பப்பட்டு இருந்த போது, அம்பிகை ஆயிரம் சேவலின் வடிவில் தோன்றி எதிர்களை தன் கூர்மையான அலகினாலும் மூக்கினாலும் குத்தி வீழ்த்தினார் என்கின்றன புராணங்கள்.
எனவே இங்கே சேவலை வாங்கி அர்பணித்து, சேவலுக்கு உணவளித்தால் நம்மை ஆட்டி படைக்கும் தீமைகளெல்லாம் நீங்கும் என்பது, நமக்கு எதிரிகள் அற்று போகும் என்பதும் நம்பிக்கை ஆகும். இதனாலேயே இக்கோவிலில் எங்கு பார்த்தாலும் சேவல்கள் அலைந்து திரிவதை நம்மால் காண முடியும். இக்கோவில் சேவல்களை ஏலம் விடுவதுமில்லை. எனவே மிக மகிழ்வஆ வாழ்ந்து, இயற்கையாகவே இவற்றின் உயிர் பிரிகின்றது.
இந்த மஹாசேத்திரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இங்கு நடக்கும் பூஜைகள் மற்றும் சடங்குகளில் பங்கேற்கின்றனர். இந்த கோவிலில் ஆராட்டு மற்றும் ஒன்பது நாள் நவராத்திரி விளக்கு ஆகிய பண்டிகைகள் வெகு பிரபலம். இந்த பண்டிகை இரவெல்லாம் கோலாகலமாக இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சியுடன் கொண்டாடப்படும். கலாச்சார நிகழ்வுகளான, கதகளி, கதாகாலசேபம் ஆகியவை நடைபெறுவதும் வழக்கம்.
இங்கு நிகழும் மற்றொரு முக்கியமான திருவிழா உல்சவம் மற்றும் நிர்மலா. இதில் உற்சவம் என்பது கொடியேற்றத்துடன் தொடங்கி திருவோணம் அன்று ஆராட்டுடன் நிறைவடையும். இவ்விழா மலையாள மாதத்தில் மீனம் எனும் மாதத்தில் நிகழ்வதாகும். இந்த இடம் கேரள வரலாற்றில் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இக்கோவில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Image : Trip Advisor