மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சோலைமலை முருகன் கோவில். அடர்ந்த வனத்தை கொண்ட மலையாகும் இது. முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று. இந்த கோவில் பெருமாளின் புகழ் மிக்க தலமான அழகர் கோவிலுக்கு அருகிலுள்ளது.
பழமுதிர் சோலை என்பது பெயருக்கேற்றார் போல வளமும் வனப்பும் நிறைந்த பகுதி. எண்ணிலடங்கா காய் மற்றும் கனி வகைகள் இங்கே பூத்து குலுங்குகின்றன. இந்த வனத்தில் வள்ளி அம்மையார் வாழ்ந்ததாக குறிப்புகளும் உண்டு. நூற்றுக்கணக்கான முருகன் கோவில்கள் இருந்தாலும் முருகனின் அறுபடை வீடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றும் அறுபடை வீடுகளின் வரிசையில் பழமுதிர் சோலை ஆறாம் கோவிலாகும்.
தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரம், எட்டுதொகை மற்று பத்துபாட்டு ஆகிய நூல்களில் இக்கோவில் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது.
அவ்வையாருக்கும் முருக பெருமானுக்கும் இடையே நிகழ்ந்த வமிகவும் பிரசித்தி பெற்ற புராண நிகழ்வான சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா எனும் சம்பவம் நிகழ்ந்தது இங்கே தான். ஒரு முறை அவ்வையார் வெயிலில் நடந்து வந்து களைப்பாற இங்குள்ள நாவல் மரத்தின் கீழ் அமர்ந்த போது. முருக பெருமான் அவ்வையை சோதிக்க சிறுவன வேடத்தில் வந்து, அசதியால் களைத்திருந்த அவ்வையிடம் "பாட்டி, உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? அல்லது சுடாத பழம் வேண்டுமா " எனக்கேட்டார். பழத்தில் ஏது சுட்ட பழம் சுடாத பழம் என நினைத்த அவ்வை, "சரி சுடாத பழத்தையே கொடு " என்றார்.
உடனே சிறுவன் வடிவில் இருந்த முருக பெருமான் மரத்தை உலுக்கினார். உடனே நாவல் பழங்கள் சர சரவென மரத்திலிருந்து உதிர்ந்தன. உதிர்ந்த வேக்கத்தில் மண்ணில் விழுந்த பழங்களை எடுத்து அவ்வை வாயால் ஊதினார். அதை கண்ட சிறுவன் "என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ?? " என வினவினார்.
சிறுவனின் மதி நுட்பத்தை கண்டு வியந்து போன அவ்வை, வந்திருப்பது மானிடன் அல்ல என்பதை உணர்ந்து யார் என்ற உண்மையை அறிய வேண்டினார். அப்போது முருக பெருமான் காட்சி கொடுத்த தலம் தான் இந்த பழமுதிர்சோலை.
மேலும் நாவல் மரங்களில் ஆடி, ஆவணியில் தான் பழங்கள் பழுக்கும் ஆனால் அதிசயமாக இந்த தலத்து நாவல் மரத்தில் மட்டும் முருகனுக்கு உகந்த மாதமாகிய சஷ்டி மாதமாம் ஐப்பசியிலும் பழம் பழுக்கும் அதிசயம் நிகழ்கிறது.
Image : FindMytemple