கை ரேகை சூட்சுமங்கள். உங்கள் கைகளில் இப்படியொரு அம்சம் இருக்கா?

Update: 2021-03-16 00:30 GMT

கடுமையான உழைப்பிற்கு எந்த மாற்றும் இல்லை என்ற போதும். சில நம்பிக்கைகள் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பது ஆச்சர்யமே. அந்த வரிசையில் கை ரேகை பார்த்து பலன் சொல்லும் பழக்கம் இன்றும் நடப்பில் உள்ளது. அதன் படி கையில் சில குறிப்பிட்ட ரேகைகள் இருந்தால் அதனை வைத்து நீங்கள் பணக்காரர் ஆவீரா இல்லையா என்பதை சொல்ல முடியும்.



உதாரணமாக, உங்கள் உள்ளங்கையில் இருக்கும் பல்வேறு ரேகைகள் பலவிதமான முறையில் பரவி இருக்கும். குறுக்கும் நெடுக்குமாக கூட இருக்கலாம். இந்த சிக்கலான ரேகைகளுக்கு நடுவே உங்களால் நேரான கோட்டினை காண முடிந்தால் நீங்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு என்கிறது ரேகை சாஸ்திரம்.

அடுத்ததாக, உங்கள் உள்ளங்கையில் இருக்கும் மேடுகள் உயர்வானதாக இருந்தால் உதாரணமாக, சுக்கிர மேடு, போன்றவை உயர்வானதாக இருந்தால் நீங்கள் பணக்காரர் ஆகும் சாத்தியம் அதிகம் என்கிறது சாஸ்திரம். உங்கள் கையில் ஆமையை போன்ற வடிவம் இருக்குமெனில் நீங்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றிகரமானவராக மாற முடியும்.

அடுத்ததாக ஒரு சிலரின் கையில் சுவஸ்திக் போன்ற வடிவம் ரேகையாக அமைந்திருக்கும். அப்படியிருந்தால் நீங்கள் வாழ்வில் அதிர்ஷமிக்கவராக இருப்பீர்கள். மேலும், உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நீங்கள் மிகபெரும் அதிர்ஷடசாலியாக இருப்பீர்கள். உங்கள் உள்ளங்கையில் இரண்டு விதியை குறிக்கும் ரேகைகள் உள்ளன. ஒன்றுக்கொன்று மேலும் கீழுமாக அமைந்திருந்தால் அது அதிர்ஷ்டத்தை குறிக்கும். 



அடுத்து, உங்கள் சனி மேட்டில் சக்கரம் போன்ற வடிவம் அமைந்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். மேலும் உங்கள் அதிர்ஷ்ட ரேகை மணிகட்டு வரை நீண்டால், நீங்கல் மிகபெரும் அதிர்ஷடசாலியாக இருப்பீர்கள். ஒவ்வொரு தனி மனிதரும் தனக்கான அதிர்ஷ்டத்துடன் தான் இந்த பூமியில் வருகிறார்கள். அது குறித்த அனுமானத்தை அறிந்துகொள்ளும் ஒரு அடையாளமாக ஒவ்வொருவரின் கை ரேகையும் அமைகிறது. உங்களுடைய விதியை நிர்ணயிக்கும் முக்கிய ரேகை சனி மேடு வரை நீண்டு பின் சுட்டு விரல் பகுதியில் பிளவுப்படும் எனில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் துல்லியமான கணிப்புகள் அல்ல, இவை மேலோட்டமாக சொல்லப்படும் பலன்கள். ஒவ்வொருவரின் கர்மாவின் அடிப்படையில் உள்ளங்கை ரேகையின் பலன்கள் மாறுபடும் என்பதே சாஸ்திர அறிஞர்களின் கருத்து.

Tags:    

Similar News