காமதேனுவிற்கு சாப விமோசனம் கிடைத்த ஆச்சர்யமூட்டும் பசுபதீஸ்வரர் ஆலயம்

ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயம்

Update: 2022-01-25 01:55 GMT

பசுபதீஸ்வரர் கோவில் அல்லது ஆவுர் பசுபதீஸ்வரம் என்பது சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட தலமாகும். தமிழகத்தின் கும்போகணம் பகுதியில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆவுர் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சோழர்கள் கட்டிய 70 மாடகோவில்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

இங்குள்ள மூலவரின் பெயர் பசுபதீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயர் மங்களநாயகி மற்றும் பங்கஜவல்லி. குறிப்பாக மங்களாம்பிகை இங்குள்ள கோவில் குளத்திலிருந்து கண்டெடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டவராவார். இங்குள்ள பங்கஜவல்லி தாயார் குறித்து தேவாரத்தில் "பங்கயமங்கை விரும்பும் ஆவுர் " என்கிற குறிப்பு இருக்கிற போதிலும் இங்கு மங்களாம்பிகைக்கே சிறப்பு. சிவராத்திரி, ஐப்பசியில் நிகழும் அன்னாபிஷேகம், திருவாதிரை ஆகியவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.

வசிஸ்டரால் காமதேனுவிற்கு சாபம் கிடைத்த போது, பிரம்மதேவர் இந்த தலத்திற்கு சென்று தவம் செய்யுமாறு காமதேனுவிற்கு அறிவுரை வழங்கினார். அதன் படி, சாபத்தை விலக்க காமதேனு சிவலிங்கத்தின் மீது பால் சொறிந்து, தவமியற்றி வழிபட்ட தலம் இது. பசுபதீஸ்வரர் என்பதற்கு பசுக்களின் அதிபதி என்று பெயர். அதுமட்டுமின்றி இந்த கோவிலில் தேவாதி தேவர்கள், சப்தரிஷிகள், இந்திரன், சூரிய பகவான் மற்றும் நவகிரகங்கள் வந்திருந்து இறைவனை வழிபட்டுள்ளனர். ஒரு முறை மேரு மலையில் ஆதிஷேசனுக்கும் வாயுவிற்கு சண்டை நிகழ்ந்த போது அதில் சிதறிய கற்கள் சிகரங்களாக திசைக்கொரு புறம் விழுந்தன அதில் இரண்டு சிதறி எழுந்த இரண்டு சிகரங்களில் ஒன்றின் பெயர் மணிகூடகிரி இதுவே ஆவுரில் விழுந்தது. மற்றொன்று சுந்தரகிரி இந்த சிகரம் திருநல்லூரில் விழுந்தது

இந்த சிகரம் பசுக்களால் பூஜிக்கப்பட்டதால் ஆவூர் என்றானது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு யாதெனில், 2 ஆம் நூற்றாண்டில் ஆவூர் என்பது கோட்டையாக இருந்தது. கோசெங்கட் சோழன் எனும் மன்னன் 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் தன் தாயின் வயிற்றில் நீண்ட நேரம் தலைகீழாக இருந்தமையால் இவருடைய கண் சிவப்பாக இருக்கும். அதனாலேயே இவருக்கு கோசெங்கண்ணனோ என்ற பெயரும் உண்டு. இவர் அரசனாக ஆன பின் 70 மாடக்கோவில்களை கட்டினார். அதாவது இந்த சந்நிதிக்குள் யானைகள் நுழைய முடியாது. அப்படியொரு மாடக்கோவில் இந்த கோவிலில் உண்டு.

அதுமட்டுமின்றி ஐந்து பைரவர்கள் உள்ள அதிசயத்தலம் இது என்பதால் இக்கோவிலுக்கு பஞ்ச பைரவர் என்ற பெயரும் உண்டு. அதுமட்டுமின்றி மற்றொரு ஆச்சர்யமாக கையில் வில் அம்புடன் முருக பெருமான் அரிதான கோலத்தில் தனுஷ் சுப்ரமணியர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.

Tags:    

Similar News