15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தமிழகத்தின் ஆச்சர்ய திருத்தலம்!

Update: 2022-09-20 00:45 GMT

புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் அல்லது திருவெள்ளறை கோவில் தமிழகத்தின் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோவில் விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் ஒன்று. அதுமட்டுமின்றி 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது.

இங்கு மூலவர் பண்டரீகாட்சன் என்ற திருப்பெயரிலும், லட்சுமி தேவி பங்கஜவல்லி என்ற திருப்பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். புராணங்களின் படி இக்கோவில் அயோத்தியின் மன்னரான சிபி சக்கரவர்த்தியால் திரேத யுகத்தில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. இதன் இரண்டு குடவரை அமைப்புகளில் மூன்று கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. ஒன்று நந்தி வர்மன் காலத்தை சேர்ந்தது மற்றொன்று தந்திவர்மன் காலத்தை சேர்ந்தது . இதன் ராஜகோபுரம் முடிவுறா வகையில் அமைந்துள்ளது.

கருட பகவான், சிபி சக்ரவர்த்தி, மார்கண்டேயர், பூமா தேவி, பிரம்ம தேவர் சிவபெருமான் என பலரும் இங்கு பெருமாளை தரிசித்துள்ளனர். மேலும் இங்குள்ள பெருமாளை தரிசிக்க ஒருவர் 18 படிகளை கடக்க வேண்டும். இது கீதையில் இருக்கும் அத்யாயங்களி குறிப்பதாக சொல்லப்படுகிறது.

இங்கு பெருமாளை இரண்டு வழிகளில் தரிசிக்கலாம். ஒரு வழி தட்சிணாயனம் காலத்தில் திறந்திருக்கும். அதாவது ஆடி முதல் மார்கழி வரை. மற்றொரு வழி உத்தராயணம் காலத்தில் திறந்திருக்கும். அதாவது தை முதல் ஆனி வரை.

ஒரு முறை சிபி சக்ரவர்த்தி படை வீரர்களுடன் தங்கியிருந்த போது அவனுடைய பாதையை ஒரு வெள்ளை பன்றி கடந்தது. அதை அவன் துறத்தி வரவே அது ஒரு புற்றில் மறைந்து கொண்டது அப்போது அருகிலிருந்த குகை ஒன்றில் மார்கண்டேய முனிவர் தவம் புரிவதை கண்ட சிபி, நடந்த விபரத்தை கூறினார். அதற்கு மார்கண்டேயர் நீ மிகவும் அதிர்ஷட சாலி பெருமாளே பன்றியின் ரூபத்தில் வந்துள்ளார். நீ அந்த புற்றுக்கு பாலூற்று என்றார். சிபியும் அந்த புற்றுக்கு பாலூற்றவே விஷ்ணு தரிசனம் தந்தார். மேலும் வட நாட்டிலிருந்த்உ 3700 வைஷ்ணவர்களை வரசெய்து தனக்கொரு கோவில் அமைக்குமாறு கூறினார். அவ்வாறே சிபி சக்ரவர்த்தி செய்த போது அந்த 3700 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். சிபி மிகவும் கவலைக்கு உள்ளானார்.

அப்போது விஷ்ணுவே புண்டரீகாட்சனாக வந்து 3700 பேரில் இறந்தவருக்கு பதிலாக பங்கெடுத்து இந்த கோவிலை உருவாக்கினார் என்பது வரலாறு. மேலும் இந்த பகுதி முழுவதும் வெள்ளை நிற பாறைகள் இருப்பதால் திருவெள்ளறை என்ற பெயர் வந்ததாகவும் புராணம் உண்டு.

Tags:    

Similar News