ஜோதிடத்தில் ராகு கேது பிரச்சனையா? வழிபாடு செய்வது எப்படி?

Update: 2021-03-20 00:00 GMT

ராகு கேதுக்கள் நவகிரஹங்களிலேயே அதிக பலமுள்ள தாக கருதப்படுபவைகள். பூமியில் இருக்கும் சர்ப்பம் இந்த நிழல் கிரஹங்களின் சூட்சம சக்தியை தாங்கி இருக்கிறதாக பெரியவர்கள் கூறுகிறார்கள். ஜாதகத்தில் ராகு கேதுக்களின் இடம் ஒருவர் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை அந்த இடத்திற்கேற்றவாறு ஏற்படுத்தும் இந்த ராகு கேது தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு நிறைய பரிகாரங்கள் இருக்கின்றன. முதலில் ராகு மற்றும் கேதுவின் குணங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.



ராகு ஆற்றல் காரியசித்தி சிற்றின்பம் கொடூரத்தன்மை போன்றவை உடையவன் கேது ஞானம், துறவு, பேச்சாற்றல் தைரியம் போன்ற குணங்களை உடையவன். ராகு கொடுத்தால் அள்ளி கொடுப்பான் என்றும் கேது இருப்பதையும் கெடுப்பான் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவார்கள். அனால் ராகு கொடுத்து கெடுப்பான் கேது கெடுத்து கொடுப்பவன் அவரவர் ஜாதகத்தின் கர்மா வினையை பொறுத்து இவர்களின் இந்த தன்மைகள் அந்த ஜாதகருக்கு வெளிப்படும். ராகுவினால் உண்டாகும் அசுப பலன் குறைவதற்கு கோமேதக கல் வைத்து மோதிரத்தை அணியலாம் 



"நாகத்துவஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹாஏ தானோ ராகு ப்ரச்சோதயாது " என்கிற காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறை கூறி வர வேண்டும். ராகுவிற்கு பிடித்தமானது உளுந்து உளுந்தில் செய்த பதார்த்தங்கள் உளுந்து வடை போன்றவற்றை ராகுவிற்கு படைத்தது வழிபடலாம். ராகுவின் அதிதேவதை காளி ஆவாள் ராகு காலத்தில் காலி தேவியை விளக்கேற்றி வழிபட ராகுவினால் வந்த துன்பங்கள் நீங்கும்.

கேதுவின் அதிதேவதை விநாயகர் தவறாமல் ஞாயிற்று கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். "அஸ்வதுவஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தானோ கேதுப்ரச்சோதயாது " என்கிற கேது காயத்ரியை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். மேலும் சண்டி யாகம் செய்வதால் கேதுவை திருப்தி படுத்த முடியும். பொதுவாக கேது ஞானமும் பேராற்றலும் உடையவன் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு எளிவர்களுக்கு உதவி செய்தால் கேதுவின் அருள் நிச்சயம் கிடைக்கும்

Tags:    

Similar News