மனித குலத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் நம் ரிஷி விஸ்வாமித்ரரின் மகன்!
கொலம்பியா பல்கலைகழகத்தின் மருத்துவ அறுவை சிகிச்சை ஆராய்ச்சி துறை இந்திய மருத்துவ அறுவை சிகிச்சை பற்றிய ஆரய்ச்சி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கொலம்பியா பல்கலைகழக்கத்தின் திர்விங் மருத்துவ மையத்தின் இணையதலாத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில். "தோல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன மருத்துவ முறையாக கருதப்பட்டு வந்திருக்கிறது, ஆனால் இது 2500 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் "ப்ளாஸ்டிக் சர்ஜரி "என்று சொவார்கள்.
இந்தியாவில் வாழ்ந்த சுஷ்ருதா என்ற மருத்துவ அறுவை சிகிச்சை நிபுனர் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். ரிஷி விஸ்வாமித்ரரின் மகன் தான் சுஸ்ருத் என மஹாபாரதம் கூறுகிறது. இவர் விஸ்வாமித்ரரின் மகன் என்பதை தாண்டி யார் இந்த சுஸ்ருத்?
இவர் தான் மனித குலத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிறது புராணங்கள். மருத்துவத்தை பற்றியும் அறுவைசிகிச்சை பற்றியும் மிக விரிவாக 184 அத்தியாங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவர் இவர். இவர் எழுதிய அந்நூலின் பெயர் "சுஸ்ருத் சம்ஹிதா "என அழைக்கப்படுகிறது. அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள குறிப்புகள் அனைத்தும் இன்றைய காலத்துடன் அதிகபட்சம் ஒத்துப்போவதஅக அறிஞர்கள் சொல்கின்றனர். மேலும் இன்று இத்துறையில் நிபுணர்களாகவும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பவர்களையே வியப்பில் ஆழ்த்துகிறது இவரின் புத்தகம். இவருக்கும் முன்பும் பின்புமாக சில மருத்துவர்கள் இருந்ததற்கான கதைகள் நம்மிடையே உலவினாலும். இவரே வரலாற்றில் அதிகாரப்ப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் துவங்கி சிகிச்சை அளைக்கப்படும் முறை வரை அனைத்து தரவுகளும் இப்புத்தகத்தில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் இந்த புத்தகத்தினையும் அடிப்படையாக கொண்டே இன்றைய உச்சத்தை அடைந்துள்ளது எனலாம்.
மருத்துவ வரலாற்றில் உயிரற்ற உடல்களை, உறுப்புகள் குறித்து கற்றுகொள்வதற்காக பயன்படுத்தலாம் எனலாம் மருத்துவ மாணவர்களுக்கு பரிந்துரைத்த முதல் நிபுணரும் இவரே. மேலும் புடலங்காய், வெள்ளரிக்காய் போன்றவைகளை கொண்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்றார் போன்ற மருத்துவ அறுவைகளை பழகலாம் என்று பரிந்துரைத்தவரும் அவரே. மேலும் நீருள்ள உறுப்புகளை மருத்துவ ரீதியில் அறுவை செய்வதற்காக உயிரற்ற விலங்குகளின் நீர் உறுப்புகளையும் லெதர் பைகளில் நீர் நிறப்பியும் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையையும் வழங்கியுள்ளார்.