பிரணவத்தை ஈசனுக்கு முருக பெருமான் உபதேசித்தது ஏன்?சுவாமிமலை ஆச்சர்யம்!

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்

Update: 2022-01-18 00:30 GMT

சுவாமிநாத சுவாமி திருக்கோவில் முருக பெருமானுக்கென்று அர்பணிக்கப்பட்ட தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் காவேரி கரையோரத்தில் கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுவாமிமலை. இக்கோவில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இக்கோவிலின் மூலவரான சுவாமிநாத சுவாமி 60 அடி உயர மலையின் மீது அருள் பாலிக்கிறார். அவருடைய அன்னை தந்தையான மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் மலை அடிவாரத்தில் அருள் பாலிக்கின்றனர்.

இக்கோவில் மூன்று கோபுரங்களை கொண்டதாகும். மற்றும் 60 படிகள் உண்டு. இந்த அறுபது படிகளும் 60 தமிழ் ஆண்டுகளை குறிப்பதாக அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வைகாசி விசாகம் பெருவிழாவிற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

இந்த கோவிலில் தான் முருக பெருமான், சிவபெருமானுக்கு ஓம்(அவும்) எனும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொன்னார். அதனால் தான்  அவர் அப்பனுக்கு பாடம் சொன்னவர் என்றழைக்கப்படுகிறார். சிவனுக்கு சில தருணங்கள் குருவாக இருந்ததால் சிவகுரு என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. அதுமட்டுமின்றி அனைத்துலகிற்கும் சுவாமியாக இருக்கும் சிவபெருமானுக்கே குருவாக விளங்கியவர் என்பதால் சுவாமிநாத சுவாமி என்று பெயர்.

சுவாமி மலை குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், பிரம்ம தேவர் கைலாசத்திற்கு செல்லும் அவசரத்தில் முருக பெருமான் அழைத்தும் அவர் நிற்கவில்லை. தன் இருப்பை உணர்த்த விரும்பிய குழந்தை முருக பெருமான், பிரம்ம தேவர் திரும்ப வருகையில், பிரம்ம தேவரிடம் சில கேள்விகள் கேட்டார். "எதை அடிப்படையாக வைத்து படைக்கும் தொழிலை செய்கிறீர்கள் " என்ற கேள்விக்கு வேதங்களை அடிப்படையாக கொண்டே படைக்கிறேன் என்றார் பிரம்ம தேவர். "எனில் அந்த வேதத்திற்கு பொருள் சொல்லும் " என்றார் முருகர். வேதத்திற்கான பொருளை சொல்ல தொடங்குகையில், ஓம் என்று சொல்லி தொடங்கினார் பிரம்மர். அந்த ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சொன்னார் முருக பெருமான்.

ஒரு குழந்தையிடம் இருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பாராத பிரம்ம தேவர் அதற்கு பதில் தெரியாது நின்ற போது அவரை சிறையில் அடைத்தார் முருகர். அவரை மீட்பதற்காக வந்த சிவபெருமான் முருகரிடம், "நீ கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் தெரியுமா?? தெரிந்தால் சொல் " என்று சொன்ன போது. முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்த தலமே இது

Tags:    

Similar News