உலகிலேயே மிகப்பெரிய விமானம்! இன்னும் பல அதிசயம் நிறைந்த பெரிய கோவில்!

Update: 2021-04-29 00:30 GMT

நன்றி: haribhakt.com

தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது, இது பரவலாக "ப்ரஹதீஸ்வர கோவில்" என்று அழைக்கப்படுகிறது மராட்டியர்கள் தஞ்சையை ஆண்ட போது இங்குள்ள சிவனுக்கு ப்ரஹதீஸ்வரர் அதாவது சர்வமும் வியாபித்திருக்கும் இறைவன் என்கிற பெயரை சூட்டினார்கள் இந்த கோவில் கட்டிடக்கலையிலும் பிரமாண்டத்திலும் ஓர் அற்புதம். கட்டிடக்கலை, வண்ண ஓவியங்கள் மற்றும் உலோகசிலைகள் போன்றவற்றினை கொண்டு இக்கோவில் கட்டப்பட்ட காலம், இந்த கோவிலை கட்டிய சோழர்களுக்கு பொற்காலமாக திகழ்ந்திருக்கவேண்டும். அதற்கு ஆதாரமாக இந்த கோவிலின் சிற்பங்கள் ஓவியங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. இந்த கோவில் முழுவதுமே இளம் சிவப்பு நிற க்ரானைட் கற்களால் கட்டப்பட்டது இந்த கற்களை கோவில் இருக்கும் இடத்தில இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுத்து வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்


கோவிலின் உச்சியில் இருக்கும் எண்கோண வடிவிலான கல் மட்டும் 81 டன் எடை கொண்டது இந்த கல்லை எப்படி அவ்வளவு உயரத்தில் (261 அடி) கொண்டுபோய் வைத்தார்கள் என்பது இன்றும் ஒரு ஆச்சர்யமே. 1010 ஆம் வருடம் அருண்மொழி வர்மன் என்கிற ராஜா ராஜா சோழனின் கனவில் வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த கோவில் வடிவமைக்கப்பட்டதாக நம்பபடுகிறது.



நாட்டின் எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளும் இந்த கோவிலின் வளாகத்திலேயே நடந்திருக்கிறது நகர மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இந்த கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில்தான் உலகிலேயே மிகப்பெரிய விமானத்தை கொண்டது. இதனாலேயே இதற்க்கு தக்ஷிண மேரு என்ற பெயர். இந்த கோவிலின் பிரமாண்டமான நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டிருக்கிறது. கல்வெட்டுக்கள் இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும், இந்த கல்வெட்டுகளில் போர் அரசாட்சி பொருளாதாரம் வாழ்வுமுறை என்ற மிக தெளிவான குறிப்புக்கள் உள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்த கட்டிட அமைப்புகள் இன்று முழுமையாக இல்லை. அனால் தஞ்சை கோவில் இன்றும் அதே பொலிவுடனும் மக்கள் வழிபடும் தலமாகவும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

உலகின் எந்த நாகரிகத்திலும் ஆயிரம் வருடம் பழமையான கட்டிடம் அல்லது வழிபட்டு தளம் இந்த அளவிற்கு தற்கால பயன்பாட்டில் உயிர்ப்புடன் இல்லை என்பது தஞ்சை பெருவுடையார் கோவிலின் தனி சிறப்பு.

Tags:    

Similar News