ஆறு மாதம் வெள்ளையாய், ஆறு மாதம் கறுப்பாய் நிறம் மாறும் அதிசய விநாயகர்

Update: 2022-10-11 00:30 GMT


தமிழக கேரள எல்லையில் தக்களை அருகே நிறம் மாறும் அதிசய விநாயகர் கோயில் உள்ளது. இந்த விநாயகர் ஆறு மாதம் வெண்மையாகவும் ஆறு மாதம் கருப்பாகவும் காட்சி தருவார். இவர் நிறம் மாறுவதற்கேற்ப அங்குள்ள அரச மரமும் கிணற்று நீரும் நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது.

ஆரம்பத்தில் பிரதிஷ்டை செய்த போது அரை அடி மட்டுமே இருந்த இவர் இப்போது ஒன்றரை அடி வளர்ந்திருப்பதாக சொல்கிறார்கள் . தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெண்மை நிறமாகவும் ஆடி முதல் மார்கழி வரை கருமை நிறமாகவும் இவர் மாறி பக்தர்களுக்கு அருள்கிறார். இந்த விநாயகர் சிலை மீது ஆடி மாத ஆரம்பத்தில் கருப்பு புள்ளிகள் தோன்றுகிறது . பிறகு நாள் ஆக ஆக முழுமையான கருப்பாக மாறி விடுகிறது . இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்ட கல்லை ஆராய்ச்சி செய்த புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் இது சந்திரகாந்தம் எனும் அபூர்வ வகையை சார்ந்த கல் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .

சுமார் 200 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் தந்திரியுடன் கடலில் குளிக்க சென்ற போது அவர் கால்களுக்கு தட்டுப்பட்ட ஒரு கல்லை எடுத்து பார்த்த போது உடனிருந்த தந்திரி இது விநாயகர் சிலையாக உருப்பெரும் என்று சொல்லியதற்கினங்க தக்களை ஸ்ரீ மகாதேவர் கோயில் பிகாரத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிறகு ஆறு மாதத்தில் சிலை வளர்ந்து கண் காது துதிக்கை உருவம் பெற்றது எல்லோரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது . சிலை சிறியதாக இருந்து அளவில் வளர்ந்திருந்ததும் பெரிய அதிசயமானது

இந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் உள்ள போது இங்குள்ள கிணற்று நீர் கருப்பு நிறமாக மாறுகிறது . விநாயகர் கருப்பு நிறமாக மாறும் போது கிணற்று நீர் நுரை நுரையாக பொங்கி வெண்மையாக மாறி விடுகிறது . இந்த காலகட்டத்தில் இந்த கிணற்றில் தரையை தெளிவாக பார்க்க முடியும் . அற்புத கணபதி என்று அழைக்கப்படும் இவர் குடிகொண்டுள்ள கோயிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடந்தாலும் தமிழ்நாடு கன்யாகுமாரி அற நிலையத் துறையின் கீழ் இயங்குகிறது . இந்த அற்புத கணபதியை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் சித்தியாகும் .

Tags:    

Similar News