ரத்தம் சார்ந்த நோய்கள் தீர்க்கும் ஆலயம். உடும்பு வடிவில் லிங்கம் இருக்கும் அதிசயம்

திருமாகறலீஸ்வரர் ஆலயம், மாகறல், காஞ்சிபுரம்

Update: 2023-01-07 00:30 GMT

காஞ்சிபுரத்தில் மாகறல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது திருமாகறலீஸ்வரர் ஆலயம். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் ஆகும். இந்த கோவிலில் இருக்கும் மூலவருக்கு திருமாகறலீஸ்வரர் என்பதும் மற்றும் இங்குள்ள அம்பாளுக்கு திருபுவன நாயகி என்பதும் திருப்பெயர்களாகும். கிட்டத்தட்ட 1000 – 2000 ஆண்டு பழமையான ஆலயம் இது. நாயன்மார்களால் பாடப்பெற்ற ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

இரண்டேக்கர் பரப்பளவில் ஐந்த அடுக்கு கோபுரத்துடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் ஆலயம் இது. இக்கோவில் வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டு, பின்பு விஜய நகர பேரரசுகளால் புணரமைக்கப்பட்டது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், இந்த பகுதியை ஆண்டு வந்த மன்னன், இங்குள்ள அதிசய பலா மரம் ஒன்றை கண்டான். அதாவது தினசரி அந்த மரத்தில் பழம் பழுக்க தவறுவதில்லை. இந்த அதிசயம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்ததால், ஊரில் உள்ள மக்கள் ஒவ்வொருவராக மரத்தில் பழுக்கும் பழத்தை நடந்தே எடுத்து சென்று சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு நெய்வேத்யம் செய்ய வேண்டும் என்று பணித்திருந்தான். ஒரு முறை ஒரு அந்தண சிறுவனின் முறை வந்தபோது அவன் அதை எடுத்து செல்ல சிரமப்பட்டான். அந்த மரத்தை அழித்துவிட்டால் ஊர் மக்களின் சிரமம் குறையும் என நினைத்தான். எனவே அந்த மரத்தை எரித்துவிட்டான்.

அவன் செய்த தவறுக்காக அவனை ஊர் கடத்தினான் மன்னன். அச்சிறுவன் தண்டிக்கப்பட இருந்த இடத்தில் பொன் உடும்பு ஒன்றை கண்டான், அதை பிடிக்க முயன்ற போது, அது ஒரு புற்றில் ஒளிந்து கொண்டது. அதன் மீது அம்பு எய்த போது அந்த புற்றிலிருந்து ரத்தம் வெளியேறியது. சிவபெருமானே உடும்பாக வந்து சிவனை காப்பாற்றியதாக ஐதீகம். இன்றும் இக்கோவிலின் லிங்கம் உடும்பின் வால் அளவில் இருப்பதை காண முடியும். மாகறல் என்றால் உடும்பு அதனாலேயே இக்கோவிலுக்கு திருமாகறலீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

ரத்தம் தொடர்பான நோய்கள் இங்குள்ள இறைவனை வணங்குவதால் நீங்குகிறது என்பது நம்பிக்கை. மேலும் ஆருத்ரா தரிசன நாட்களில் இங்குள்ள நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.

Tags:    

Similar News