சனிபகவானுக்கு ஈஸ்வர பட்டம் ஏன்?அதிசயமூட்டும் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயம்!

Update: 2022-01-04 00:30 GMT

திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயம் அல்லது தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தலம் ஆகும். இங்குள்ள சிவபெருமான் தர்ப்பாராண்யேஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இங்கிருக்கும் அம்பிகைக்கு பிராணேஸ்வரி அம்மன் என்பது திருப்பெயர். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். மேலும் நவகிரக ஆலயங்களுள் இது முக்கியமானது சனிபகவான் இருக்கும் ஆலயம் இது.

இக்கோவில் இரண்டு ஏக்கர் நிலப்பரபில் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு கோபுரத்தை உடையது. இக்கோவில் பல்வேறு சந்நிதிகள் இருந்தாலும் தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிராணேஸ்வரி அம்மன், சனிபகவான் மற்றும் சோமஸ்கந்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி விழாவும் மற்றும் ஒவ்வொரு சனி பெயர்ச்சி நடக்கிற போதும் இக்கோவிலில் விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த பகுதி தர்பையால் நிரம்பியிருந்தது. தர்பை அதாவது புல் நிறைந்த இடமாக இருந்தது. அப்போது தர்பையிலிருந்து சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் தோன்றியதாலும். ஆரண்யம் என்றால் காடு இந்த இடம் தர்பையால் நிரம்பிய காடு என்பதை குறிக்கும் விதமாக தர்பாரண்யம் என்று அழைக்கப்ட்டது. தர்பாரண்யத்தில் தோன்றிய ஈஸ்வரன் என்பதால் இவருக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற் பெயர்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், நிடத நாட்டின் அரசனான நளன் சேதி நாட்டின் இளவரசியான தமயந்தியை சுயம்வரத்தில் வென்று மணந்தான். இதனை கண்டு பொறாமையுற்ற தேவர்கள் சனீஸ்வரனிடம் அவனை துன்புறுத்துமாறு வேண்டினார். நளனின் நற்பண்புகளை உணர்த்த விரும்பிய சனீஸ்வரன அவரை ஏழரை ஆண்டுகள் பிடித்தார். இருப்பினும் தன் நற்பண்புகளில் இருந்து தவறாது அறம் காத்து வந்த நளன் ஒருமுறை தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார். அப்போது நளன் நுழைந்த இந்த ஆலயத்தின் மாடத்திலேயே சனீஸ்வரன் நளனை விட்டு விலகி நின்று கொண்டதாக ஐதீகம். சனீஸ்வரனின் இந்த பண்பை மெச்சிய சிவபெருமான் அவருக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து இங்கேயே வைத்து கொண்டதாக புராணங்கள் உணர்த்துகின்றன.

கிழக்கு நோக்கியிருக்கும் அமர்ந்திருக்கும் சனீஸ்வரனை வணங்கினால் சனித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. மேலும் சனியின் தாக்கத்தால் துயருருபவர்கள் நளசரிதம் படித்தால் நல்லதே நடக்கும் தொன் நம்பிக்கை ஆகும்.

Tags:    

Similar News