குறிப்பிட்ட தினங்களில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசும் அதிசய ஸ்தலம்!

Update: 2021-04-08 00:15 GMT

தமிழகத்தில் ராகு கேது தோஷப் பரிகார ஸ்தலங்களில் முதன்மையானது திருப்பாம்பிரம் கோயில் . நாக தோஷ நிவர்த்திக்கு காளஹஸ்தியை விட ஆற்றல் வாய்ந்த தளமாக இது விளங்குகிறது . இந்த தலம் ஆதி ஷேசன் ராகு கேது மற்றும் அஷ்டமா ,நாகங்கள் சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற இடம் .

ஆதி ஷேசனுடைய மூல விக்ரகமும் உற்சவர் விக்ரகமும் இங்கு உள்ளது. இங்கு இறைவன் ஷேச புரிஸ்வரர் என்றும் இறைவி வண்டார குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார் . இது ஆதி ஷேசன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கோவிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்..

பாம்புகள் இங்கு உலவுவதாகவும் ஆனாலும் பாம்புகள் யாரையும் இங்கு தீண்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். விஷம் தீண்டா பதி என்ற சிறப்பு பெயரும் இத்தலத்திற்கு உண்டு. 2002 மார்ச் 21 அன்று முதல் பூஜைக்காக நடை திறந்த போது விக்ரகத்தின் மேல் 7 அடி பாம்பு சட்டை இருந்திருக்கிறது. இன்றும் கோவிலில் அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.



குடந்தை நாகூர் திருநாகேஷ்வரம் காளஹஸ்த்தி கீழ் பெரும்பள்ளம் ஆகிய ஸ்தலங்களை ஒருங்கே தரிசித்த பலன் இந்த கோவிலில் கிடைக்கும் . ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இருந்து அதாவது ஒரே உடலாக இருந்து சிவனை நெஞ்சில் வைத்து வழிபட்டதால் இது மிகச் சிறந்த ராகு கேது பரிகார தலமாக விளங்குகிறது ... இங்குள்ள அஷ்ட நாக சன்னிதியோடு சேர்த்து 7 சன்னிதிகளில் விளக்கேற்றி வழிபட்டால் சர்ப தோஷம் முற்றிலுமாக விலகுகிறது . இங்கு ஞாயிரு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கர்ப கிரகத்தில் பாம்புகள் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது .

இந்த கோவில் அமைந்துள்ள ஊரின் எல்லைக்குள் ஆன் டான்டு காலமாக இது வரை யாரையும் பாம்பு தீண்டியதில்லை. ஒரு முறை விநாயகர் சிவனை வழிபட அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னை வழிபடுவதாக நினைத்து கர்வம் கொண்டதால் ஸர்பங்கள் வலிமையற்று போகட்டும் என்று சபித்தார் பிறகு மனம் இறங்கி சிவ ராத்திரி அன்று இரவு மூன்றாம் ஜாமத்தில் தன்னை வழிபட்டு சாப விமோசனம் தேடிக் கொள்ளுமாறு கூறினார் . அப்படி சர்ப்பங்கள் அனைத்தும் பூமியில் ஈசனை வழிபட்ட தளம் திருப்பாம்பிரம் . இந்த ஸ்தலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது .

Tags:    

Similar News