திருப்பதி வெங்கடாசலபதி முகத்தில் அன்றாடம் நிகழும் அதிசயம்!

Update: 2021-03-14 02:06 GMT

இந்திய கோவில்களில் மிக முக்கியமானது திருப்பதி பாலாஜி கோவில். இந்த கோவில் சித்தூர் பகுதியிலிருக்கும் திருப்பதியிலிருந்து வட மேற்கு திசையில் 10 கி.மீ தள்ளி அமைந்துள்ளது. இதுவே வெங்கடாசலபதியின் சொர்க்கபுரமான வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.

இங்கிருக்கும் வெங்கடாஜலபதியை பாலாஜி எனவும் அழைக்கின்றனர். இலட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் இங்கிருக்கும் வெங்கடேஸ்வரனை தரிசிக்க தினமும் வரிசையில் காத்து கிடக்கின்றனர். பல்வேறு பகுதியிலிருந்து, ஏன் பல்வேறு நாட்டிலிருந்து கூட பக்தர்கள் வருகின்றனர்.



இங்கு வருகை புரியும் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் முடியை காணிக்கையாக அளிக்கின்றனர். முடியை காணிக்கையாக வழங்குவது பழங்காலமாக தொன்றுதொட்டு இருந்து வரும் புனித அர்பணிப்பாக, வழக்கமாக இருக்கிறது. இதற்கு பின் சொல்லப்படும் வரலாறு யாதெனில், கந்தர்வ குல இளவரசியான நீலா தேவி பெருமாளை அறியாமல் இடித்ததில் சில திருமுடிகளை பெருமாள் இழந்திருந்தார்.

இந்த இழப்பை பொருக்காத நீலா தேவி, தன்னுடைய திருமுடியில் சிலவற்றை கத்தரித்து, அய்யனுக்கு சூட்டினாள். இதற்கு வரமாக, தன்னுடைய பக்தர்கள் அர்பணிக்கும் திருமுடி நீலாதேவியின் திருமுடியாகவே கருதப்படும் என வரமளித்தார். இந்த கோவிலை சுற்றியும், இந்த மலையை சுற்றியும் பல கோவில்கள கட்டப்பட்டுள்ளன. அனைத்தும் வித்தியாசமான திராவிட வடிவமைப்பு கொண்டது.



திருமலை கோவிலில் கூட உள்ள தூண்கள் மணற்கற்களால் ஆனவை. இந்த கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் இந்தியாவின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல முக்கிய அன்னதானங்களுள் ஒன்று. இங்கு வழங்கப்படும் அன்னதானம் நித்ய அன்னதானம் என அழைக்கப்படுகிறது. இதனை டி.டி.டி அமைப்பு ஒருங்கிணைக்கிறது. ஒரு நாளில் மட்டும் 12,000 பேர் இங்கே உணவு அருந்துகின்றனர்.

ஶ்ரீவாரி லட்டு பிரசாதம், இதன் அடுத்த தனித்துவம். திருமலை செல்பவர்கள் அய்யனின் தரிசனத்திற்கு தித்திப்பாய் விரும்பி பெரும் பிரசாதம். இக்கோவிலின் மற்றொரு அதிசயமாக சொல்லப்படுவது அய்யனின் திருமுகத்தை எத்தனை முறை துடைத்தாலும், ஈரபதம் எப்போதும் இருக்கும் என்பதே.

திருமலை திருப்பதி சன்னிதானம் சென்று வர வாழ்வின் அனைத்து துயரங்களும் நீங்கும். பொருளாதாரம் மேன்மை பெரும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை மெய்பிக்கும் வகையில் இங்கே வெங்கடேஸ்வரனுக்கு காணிக்கையாக குவியும் பொன்னும் பொருளும் இந்திய புகழ்பெற்றது.

திருமலை சென்று வர திருப்பம் நிச்சயம் என்பது சென்று வந்த பக்தர்கள் அனைவரும் சொல்லும் வாக்கு!

Tags:    

Similar News