நாளுக்கு நாள் வளரும் நந்தி! ஆச்சர்யமூட்டும் ஆலய அதிசயம் யாகன்டி கோவில்!

Update: 2021-03-16 00:00 GMT

சங்கமா சாம்ராஜ்யத்தின் அரசன்ன் ஹரிஹர புக்க ராயா அவர்களால் கட்டப்பட்ட கோவில் ஶ்ரீ யாகன்டி உமா மஹேஸ்வர கோவில். ஆந்திர பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். வைஸ்ணவர்களின் பாரம்பரிய படி கட்டப்பட்டது இக்கோவில்.

15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், அகஸ்திய முனி அவர்கள் வெங்கடேஸ்வரருக்கு இங்கு ஒரு கோவில் அமைக்க முடிவு செய்தார். 

அதன் படி அவர் வடிவமைத்த சிலையில் கால் விரலின் நகம் உடைந்து விட்டது இதை கண்டு மனம் வருந்திய அகஸ்தியர், சிவபெருமானை எண்ணி தவம் புரிந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சிவபெருமான் இந்த தலம் கைலாசத்தை ஒத்து இருப்பதால் இது சிவன் தலம் அமைய ஏதுவானது என தெரிவித்ததாகவும். அவர் கோரிக்கையின் படி இங்கே உமா மகேஷ்வரராக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது. 



இங்கு சொல்லப்படும் மற்றொரு கதை யாதெனில், சிவபெருமானின் தீவிர பக்தரான சித்தீப்பா சிவனை தொடர்ந்து வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் முன் புலி வடிவத்தில் தோன்றினார் சிவன். இதனை புரிந்து கொண்ட சித்தீப்பா நேகண்டி சிவானு னெ கண்டி என தெலுங்கில் சத்தமாக அனைவருக்கும் தெரிவித்தார். இதன் பொருள் நான் சிவனை கண்டுவிட்டேன். இதன் பொருட்டு இந்த கோவில் அருகில் ஒரு குகை இருக்கிறது அதன் பெயர் சித்தீப்பா. வருடாவருடம் இங்கே சிவராத்திரி மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.


இந்த கோவிலின் மற்றொரு தனித்துவம் யாதெனில் இந்த கோவிலின் அமைந்துள்ள நந்தியின் சிலை நாளுக்கு நாள் வளர்கிறது என சொல்லப்படுகிறது. இங்கு இருக்க கூடிய மக்கள் சொல்வதும் அதுவே, இங்கிருக்கும் நந்தி இங்கே நிர்மாணிக்கப்பட்ட இருந்த அளவை விட இப்போதிருக்கும் நந்தி வளர்ந்துள்ளது. இதனுடைய காரணம், அறிய பலவிதமான அறிவியல் ஆய்வுகள் இங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சாரர் இந்த நந்தியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கல்லானது , நாளுக்குநாள் அதிகரிக்கும் தன்மையுடையதாக இருக்கலாம் என சொல்கின்றனர்.

இங்கிருந்த ஒரு கோவில் தூண் கூட நந்தியின் வளரும் தன்மையால் அகற்றப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை மேலும் கூட்டுகிறது.

Tags:    

Similar News