பௌர்ணமி வழிபாடும் பலன்களும் என்ன - தெரிந்துகொள்ளுங்கள்!

பௌர்ணமி தினத்தன்று நிலவை வழிபடுவதாலும் குலதெய்வத்தை வழிபடுவதாலும் கிடைக்கக்கூடிய பலன்கள்

Update: 2022-08-11 14:30 GMT

சந்திரன் குறையற்ற முழு நிலவாக ஒளி வீசக்கூடிய நாள்தான் பௌர்ணமி. பௌர்ணமி வழிபாடு என்பது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

பொதுவாக சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினம் சிறப்பான நாளாக கருதப்பட்டாலும் அனைத்து மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமியும் தெய்வ வழிபாட்டிற்கு ஏற்புடையதே. பொதுவாக பௌர்ணமி தினத்தன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதனால் நமக்கு மட்டுமல்லாமல் நம் எதிர்கால சந்ததியினருக்கும் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


குலதெய்வ கோவிலுக்கு சென்று வர முடியாதவர்கள் பௌர்ணமி தினத்தன்று வீட்டிலேயே குலதெய்வம் படத்திற்கு மாலையிட்டு , தீபமேற்றி, நிவேதனமாக ஏதேனும் ஒரு பொருள் வைத்து வழிபட்டால் அதே அளவு பலன் கிடைக்கும். பௌர்ணமி வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது குபேர பூஜை, லட்சுமி பூஜை என்று அனைத்து விதமான பூஜைகளும் செய்ய ஏற்புடைய நாளாக இருக்கிறது.


முழு நிலவாக ஒளி வீசக்கூடிய சந்திர தேவனை நாம் பௌர்ணமி தினத்தன்று வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையும் முழுநிலவு போலவே ஒளிவீசும். வீடு, மனைகள் வாங்குவதற்கும் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் ,எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற நாளாக பௌர்ணமி தினம் கருதப்படுகிறது. நிலவு வழிபாடு நிம்மதி தரும் என்பதில் எதுவும் ஐயமில்லை.

Similar News