மகாபாரதம் எழுதிய விநாயகர்!
விநாயகர் மகாபாரதம் எழுதிய புராண கதை பற்றி காண்போம்
விநாயகர் பல லீலைகளை செய்துள்ளார். அதில் ஒன்றுதான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதிய மகாபாரதம். வியாசர் மகாபாரதத்தை எழுத நினைத்தார். ஆனால் தான் சொல்லும் சுலோகத்திற்கு அர்த்தம் புரிந்து எழுதும் நபர் யார் இருக்கிறார்கள் என்று தேடினார். இறுதியில் அவர் விநாயகரை அணுகினார். ஆனால் விநாயகரோ நான் எழுத வேண்டும் என்றால் என் எழுத்து தடைபடாதபடி வேகமாக சொல்ல வேண்டும். எங்காவது நீங்கள் ஸ்லோகம் சொல்லும் வேகத்தில் சுனக்கம் ஏற்பட்டால் நான் எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார்.
அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் தங்கு தடை இன்றி மகாபாரத காவியத்திற்கான ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தார். ஆரம்பத்தில் மயிலிறகால் எழுதிய விநாயகர் ஒரு கட்டத்தில் மயிலிறகு முறிந்து போய்விட தன்னுடைய தந்தத்தில் ஒன்றை உடைத்து மகாபாரத காவியத்தை எழுதியதாக விநாயகர் புராணம் சொல்கிறது.