காயத்ரி மந்திரம் என்பது மிகவும் சக்தி படைத்த தெய்வீக மந்திரங்களுள் ஒன்று !

Update: 2021-10-04 23:45 GMT

காயத்ரி மந்திரம் என்பது மிகவும் சக்தி படைத்த தெய்வீக மந்திரங்களுள் ஒன்று. வேதத்தில் எழுதப்பட்ட இந்த மந்திரம் 24 ஒலிகளை கொண்டது. இதனை உச்சரிப்பதால், உடல் அளவில், மன அளவில் பெரும் தாக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்திற்கென்று பல அற்புத பலம் உண்டு. காயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் பொதுவான பலன் யாதெனில், கடவுளின் ஆசியை ஒருவர் பெற முடியும். கடவுளை வழிபட முடியும், ஆனந்தமான வாழ்வு, பொருளாதாரம் ஆகியவை கிடைக்கும்.

ஒரு நாளில் காயத்ரி மந்திரம் சொல்வதற்கென குறிப்பிட்ட மூன்று நேரங்கள் உண்டு. சந்தியாகாலம், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இந்ந்த மூன்று நேரங்களில் தான் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். இந்த மூன்று நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் ஒருவர் மந்திரத்தை சொல்ல விரும்பினால், அதை அவர்  மனதிற்குள் தான் சொல்லி கொள்ள வேண்டும். உரக்க சொல்ல கூடாது.

இந்த மந்திரத்தை சொல்வதனால் மனம் முதிர்வடையும், எண்ணவோட்டம் குறைந்து மனம் ஒருநிலைப்படும், அந்த சூழலில் தெய்வீகத்திற்கும், நமக்குமான தொடர்பு மிக நெருக்கமாக இருக்கும். எளிமையாக சொன்னால், நம் குரல் தெய்வத்திற்கு எட்டும். நம்முடைய பக்தி நிலை மிக ஆழமாக இருக்கும். எனவே காயத்ரி மந்திரம் சொல்வதால் நமக்கு நிகழும் நன்மைகள் சிலவற்றை நாம் காணலாம்.

தீய சக்திகளிடமிருந்து நம்மை காக்கும் பாதுகாப்பு அறணாக இந்த மந்திரம் திகழும். இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதால், நம்முடைய வருங்கால தலைமுறையினர் அறிவாளியாக பிறப்பார்கள். இது நம் வருங்காலத்தை ஞான ஒளி மிகுந்ததாக வைத்திருக்கும். குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் ஆகியவற்றை நிலைக்க செய்யும்.

இந்த மந்திரத்தை குழந்தைகள் 108 முறை சொல்வதால் மிகுந்த அறிவாளியாக இருப்பார்கள். அவர்களின் மனவலிமை அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமை மற்றும் அமாவாசையில் சிவப்பு நிற உடையணிந்து மனதில் துர்கையை மனமாற நினைத்து பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்களின் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.

மற்றும் இந்த மந்திரத்தை மஞ்சள் நிற உடையணிந்து 108 முறை சொல்வதால் தடைப்பட்ட திருமணம் நிகழும். மொத்தத்தில் ஆன்ம பலத்தையும், ஆன்மீக அருளையும் வழங்கும் உன்னத மந்திரம் காயத்ரி மந்திரம்.

Image : Spotify


Tags:    

Similar News