வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் வேண்டுமா? நீங்கள் மாற்ற வேண்டிய விஷயங்கள்!
வீடுகளில் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செல்வம் இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஒருவர் எப்பொழுதும் தன் வேலை செய்யும் இடங்களில் இருக்கும் கோபத்தையும் அல்லது வெறுப்பையோ தன்னுடைய வீட்டில் தான் காட்டுகிறார்கள். இதன் பெயரில் அவர்கள் தங்களுடைய வீட்டிலுள்ள நபர்களிடம் கோபத்திற்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக உங்கள் வீட்டில் அமைதி மற்றும் செல்வம் இழக்கப்படுகிறது என்றால் இனி கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்கள் இருந்தால் அவற்றை சரியாக வைப்பதன் மூலம் இழந்ததை திரும்பப் பெற முடியும். இதில் நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா? என்றால் உண்மையில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில் உலகில் எப்பொழுதும் இரண்டு சக்திகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று சொல்வார்கள்.
எனவே பாசிட்டிவ் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டிய சில விஷயங்கள், முதலில் உங்கள் வீட்டில் ஒரு சிரித்த புத்தர் சிலை இருக்கிறதா? அதை உங்கள் வீட்டில் டேபிள் பகுதியில் வையுங்கள். குபேந்திரன் சிலை எப்பொழுதும் வீட்டில் இருப்பது ஒரு வித மகிழ்ச்சியும் செல்வத்தையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் இது இருப்பதன் மூலமாக கடன் பிரச்சனை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. சீனர்களின் நம்பிக்கை படி, டிராகன் சிலை மிகவும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கண்டறியப்படுகிறது.எனவே ஒரு சிலையை உங்களுடைய வீட்டில் புத்தர் சிலைக்கு அருகில் அல்லது எதிர் பக்கத்தில் வைக்கலாம்.
மேலும் அனைத்து கடவுள்களின் வழிபாட்டிற்காக ஊதுபத்திகளை அளிப்பார்கள். இதுவும்கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வாசலாக ஏற்படுகிறதாம். எனவே ஊதுபத்திகளை நீங்கள் உங்கள் வீட்டில் அல்லது கடைகளில் வைக்கலாம். மேலும் சிவப்பு நிற ஊதுபத்திகள் சிறந்தது என்று கூறப்படுகிறது. மணி பிளான்ட் என்பது ஒரு வகை தாவரம் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக வெளிப்படுகிறது. இதை பெரும்பாலானோர் வீட்டில் தங்களுடைய அறையில் வளர்கிறார்கள்.
Input & Image courtesy: Twitter post