எண்ணை தீபத்தை விட நெய் தீபம் உயர்ந்தது ஏன் ?

Update: 2021-10-21 00:00 GMT

இந்து வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கம் விளக்குகள். இன்னும் சொல்லப்போனால் ஒரு சடங்கு அல்லது வழிபாடு தொடங்கப்படுகிறது என்பதன் முக்கிய அறிகுறியாக, குறியீடாக முதலில் ஏற்றப்படுவத் தீபம் தான். தீபத்தின் முக்கியத்துவத்தை ஒருவர் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பும் ஏற்றப்பட்ட பின்பும் இருக்கும் வித்தியாசமே அதனை உணர்த்திவிடும். தெய்வீகத்தின் இருப்பை உணர்த்தி நமக்குள் இருக்கும் ஆன்மீக ஆற்றலை வெளிக்கொணரும் ஊக்கியாக தீபம் செயல்படுகிறது.

இந்த தீபம் ஏற்றுவதில் பல சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக எந்த எண்ணையை கொண்டு தீபம் ஏற்றுகிறோம் என்பது முக்கியம். ஒரு சில பரிகாரங்களில் நாம் எந்த எண்ணையை அல்லது எரிபொருளை கொண்டு தீபம் ஏற்ற வேண்டும் என்ற அளவில் நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ளது. அதில் எண்ணை விளக்கை காட்டிலும் நெய் தீபம் தான் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

தீபம் எனும் பழக்கம் நமது மரபில் மட்டுமல்ல , உலகின் பல கலாச்சாரத்திலும் பல்வேறு விதத்தில் பல்வேறு வடிவத்தில் பயன்பாட்டில் இருக்கிறது.

படைப்பில் மூன்று முக்கிய அம்சம் உண்டு, ஒன்று ராஜோ குணம், சாத்வீக குணம் மற்றும் தாமச குணம். அதாவது ரஜோ என்பது ஒருவித ஆக்ரோஷத்தையும், தாமச குணம் என்பது சோர்வான அல்லது தளர்வான மனநிலையையும், சாத்வீகம் என்பது நேர்மறயான அம்சத்தையும் குறிக்கிறது. இதற்கும் தீபத்திற்கும் தொடர்பு உண்டு. நாம் எந்தவகை எரிபொருள் பயன்படுத்துகிறோமோ அது அந்த குணத்தை அதிகமாக தூண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் நமக்கு நன்மைகளை அள்ளி வழங்க கூடிய நேர்மறை ஆற்றலை வழங்கும் சாத்வீக குணத்தை அதிகரிக்க ஒருவர் நெய் தீபம் ஏற்றுவது உகந்தது என சொல்லப்படுகிறது.

மேலும் மற்றொரு நுட்பாமான கூறு இந்த எரிபொருள்களுக்கு உண்டு. அதாவது நீங்கள் எண்ணை தீபத்தை ஏற்றும் போதும் ஏற்றிய ஒளிக்கீற்றில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற தீபம் எரியும். இந்த மஞ்சள் மற்றும் சிவப்பு என்பது நல்ல அதிர்வுகளை நமக்குள் கடத்தும். அதே வேளையில் நீங்கள் நெய்யை கொண்டு தீபமேற்றினால், அந்த மஞ்சள் மற்றும் சிவப்புடன் நீல நிறமும் சேர்ந்து மிளிரும், நீல நிறம் என்பது ஆன்மீக ஆற்றலின் குறியீடாகும்.

எனவே தெய்வீக அம்சம் கொண்ட நெய்யினால் தீபமேற்றுகிற போது இறைக்கும் நமக்குமான தொடர்பு வலுப்படுகிறது. நமது கவனம் சிதறாமல் ஆன்மீகத்தில் தோய்ந்து, இறைவனின் அருளுக்கு முழுமையான பாத்திரமாக நம்மால் முடிகிறது.

.Image : Astroved

Tags:    

Similar News