வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று தங்க ரதத்தில் காட்சி தந்த பெருமாள் - திருப்பதியில் தங்க தேரோட்டம்

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது. நான்கு மாத வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தங்க தேரில் பவனி வந்து பெருமாள் காட்சி தந்தார்.

Update: 2023-01-03 06:45 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெண்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12:30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தன. பூஜை முடிந்ததும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் காலை 6 மணியளவில் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் எழுந்தருளினார். தங்க தேரை பெண்கள் வடம் பிடித்து இழுக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் 4 மாட வீதியில் தேர் வலம் வந்தது. இன்று மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் இரவு அதிநாயன உற்சவம் நடைபெறவுள்ளது. வைகுண்ட துவாதசியையொட்டி ஏழுமலையான் கோவில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.



 


Similar News