ராமர் பட்டாபிஷேக படத்தின் முன் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மை
சுந்தர காண்டம் என்பது இராமாயணத்தின் ஓர் அங்கம். குறிப்பாக சுந்திர காண்டத்தை பாராயணம் செய்வதால் நமக்குள் நம்பிக்கை பிறக்கிறது. காரணம் இந்த பகுதியில் தான் ஹனுமன் தீமைகளை வேரறுத்து தர்மத்தை நிலைநாட்டினார். இந்த பகுதியில் தான் மக்கள் தர்மத்தின் மீது நம்பிக்கை கொள்ள துவங்கினர். வாழ்வில் வெல்ல வேண்டுமெனில் அதற்கு மனிதர்கள் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்திய பகுதி இது.
ராமாயணத்தில் வருகிற சுந்தர காண்டத்தை படிப்பது என்பதையே பாராயணம் என்கிறார்கள். இந்த பாராயணத்தை ராம நவமி, நவராத்திரி, மற்றும் வீட்டில் சுப காரியங்கள் நிகழ்கிற போது என அனைத்து நல்ல வேளைகளிலும் பாராயணம் செய்யலாம்.
இதில் பாராயணத்தை இரண்டு விதமாக செய்யலாம். ஒன்று ஒத்த கருத்துடைய மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில்களில், மண்டபங்களில், பொது இடங்களில் கூடி பாராயணம் செய்வது. மற்றொன்று ஒரு தனிநபர் தனிப்பட்ட முறையில் செய்வது.
இந்த பாராயணத்தை ஶ்ரீ ராமரின் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட புகைப்படத்தின் முன்பாக செய்வது சிறப்பை தரும். மேலும் பாராயணம் செய்வதற்கு முன்பும் பின்பும் முறைப்படி பூஜைகள் செய்து நெய்வேத்யம் படைத்து செய்வதால் இதன் முழு பயனையும் ஒருவர் அடைய முடியும். மற்றும் துளசி, தாமரை ஆகிய மலர்களை அர்பணித்து நெய்வேத்யத்தில் குறிப்பாக மாதுளை பழம் வைத்து வணங்கினால் மிக சிறப்பான பலனை இந்த பாராயணம் நல்கும் என பண்டிதர்கள் சொல்கின்றனர்.
இந்த பாராயணத்தை ஒருவரால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிக்கலாம். அதனை படிக்கிற போதே அவர்களின் மனக்குறையை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம். இப்படி செய்வதால் அவர்களுக்கான தீர்வு நிச்சயம் கனியும். மேலும் தீய சக்திகளின் பிடியிலிருந்து விலக முடியும். புத்தியில் மந்த நிலையிருப்பின் சுந்தரகாண்ட பராயணத்தின் மூலம் அவை நீங்கும். மேலும் கெட்ட கனவுகள், பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வது, வளமும், இன்பமும் பெருக, எதிர்வரும் ஆபத்துகள் விலகுவது போன்றவை