தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை.. முருகன் கோயில்களில் திரளும் பக்தர்கள் கூட்டம்.!

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை.. முருகன் கோயில்களில் திரளும் பக்தர்கள் கூட்டம்.!

Update: 2021-01-28 10:29 GMT

தமிழ் கடவுள் முருகப் பெருமானைச் போற்றி இன்று தமிழக முழுவதிலும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளான முருகன் கோயில்களில் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையே இன்று உலகம் முழுவதிலும் முருகபக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மருதமலை, பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் காவடி மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. எங்கும் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. என்ற கோஷத்துடன் பக்தர்கள் செல்வதை பார்க்க முடிகிறது. கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் பழனி மற்றும் திருத்தணி முருகப்பெருமானை தரிசிக்க சென்றுள்ளனர்.

இந்த விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இன்று விடுமுறையை அரசு அறிவித்த காரணத்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோயில்களில் குழுமியுள்ளதை பார்க்க முடிகிறது.
 

Similar News