பேறு காலத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் !
Health Tips.
தாய்மை என்பது ஒரு குழந்தையை கருவில் சுமப்பது மட்டுமல்ல. ஒரு குழந்தை என்பது ஒரு குடும்பத்தின் நன்மை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் நலம். இந்த கால கட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட சொல்லி அறிவுருத்துவார்கள். அவ்ர்கள் சொல்வது வெறுமனே மூட நம்பிக்கை என எடுத்து கொள்ளாமல், அதன் பின் இருக்கும் காரண அறிவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பேறு காலத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். "தி பெட்டர் பேபி புக் " என்கிற புத்தகத்தின் துணை ஆசிரியரான, மருத்துவர். லானா ஆஸ்ப்ரே குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் காரணியாக ஜீன்களும் இருக்கும் என்கிறார். அதே சமயத்தில் ஒரு சராசரி ஜீன் கூட பேறு காலத்தில் நாம் கடைப்பிடிக்கிற முறையான வாழ்க்கை முறையினால் அந்த ஜீன்களை முறையாக நாம் சீர்படுத்தலாம்.
கருவில் இருக்கும் குழந்தையின் அறிவினை மேம்படுத்தும் விஷயங்கள் என்ன? உங்களுக்கும் குழந்தைக்குமான இடையே இருக்கும் கோடு மிக மென்மையானது. அந்த குழந்தைக்கு வெளிப்புறத்தில் இருந்து கிடைக்க கூடியது தாயின் தொடர்ச்சியான ஸ்பரிசம். உங்கள் தொடுகையை குழந்தையால் மிக விரைவாக உணர முடியும். இந்த தொடுகை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக வைத்திருக்க உதவும். எனவே அவ்வப்போது கருவில் இருக்கும் குழந்தையை, வயிற்றின் மேலிருந்து கீழாக மிக மென்மையாக வருடிக்கொடுக்கலாம்.