ஶ்ரீ பத்மநாப சுவாமி கோவில் மஹாவிஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது !
பண்டைய காலத்தில் திருவாங்கூர் மஹாராஜாவை ஶ்ரீ பத்மநாபதாசா என்று அழைப்பார்கள். அதாவது பத்மநாபருக்கு சேவை என்று பொருள்.
ஶ்ரீ பத்மநாப சுவாமி கோவில் மஹாவிஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. பதம்நாபசுவாமி கோவில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில அமைந்துள்ளது. தற்சமயம் இந்த கோவிலை இன்றும் திருவாங்கூர் அரச பரம்பரை நிர்வகிக்கிறது. இந்த கோவில் பார்ப்பதற்கு அச்சு அசல் திருவட்டூர் ஆதிக்கேசவ பெருமாளை போலவே இருக்கும் என பலர் சொல்கின்றனர். இந்த கோவிலில் பெருமாள் ஆனந்த சயன கோலத்தில் இருக்கிறார். அதாவது எல்லையற்ற யோக நித்திரையில் ஷேசனின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். பண்டைய காலத்தில் திருவாங்கூர் மஹாராஜாவை ஶ்ரீ பத்மநாபதாசா என்று அழைப்பார்கள். அதாவது பத்மநாபருக்கு சேவை என்று பொருள்.
இந்த கோவிலின் உள்நுழைவதற்கு பிரத்யேக உடை கட்டுபாடுகள் உண்டு. மேலும் 108 திவ்யதேசங்களுள் மிக முக்கியமான கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலின் பெருமையை திவ்ய பிரபந்தத்தில் போற்றி பாடியுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் பெருமாளின் அமைப்பை காண கண் கோடி வேண்டும். ஆனந்த சேஷன் எனும் நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கிறார் அய்யன். ஆனந்த சேஷன் தன் ஐந்து தலைகளை உட்புறம் நோக்கியவாறு கொண்டுள்ளது. மேலும் பெருமாளின் வலது கரம் சிவலிங்கத்தை தொடுவதை போன்ற அமைப்புடன் இருக்கிறது.
செல்வத்தை குறிக்கும் ஶ்ரீதேவியும், பூமியின் அதிபதியான பூதேவியின் உடனிருக்க தன் தொப்புளில் இருந்த நீண்ட தாமரையில் இருந்து பிரம்மதேவரும் அமைந்துள்ளார். இந்த திருவிக்ரகம் 12000 சாலிகிராமத்தால் ஆனது. இந்த சாலிகிராமங்கள் நேபாளத்தில் இருக்கும் கந்தகி நதிக்கரையிலிருந்து எடுத்துவரப் பட்டவை அந்த சாலிகிராமத்திற்குரிய சடங்குகள் அனைத்தும் பசுபதிநாதர் ஆலயத்தில் செய்யப்பட்டது. இங்கு பெருமாளுக்கு கடுசர்கரயோகம் எனும் தனித்துவம் வாய்ந்த ஆயுர்வேத காப்பு சாற்றப்படுகிறது.