நவராத்திரியில் கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம்?
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட முடியாதவர்கள் எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்பது பற்றி காண்போம்
நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சக்திதேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வணங்கி வழிபடுகிறோம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்று முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால், கொலு வைக்காதவர்கள் அம்பாளை மனதார வேண்டிக் கொண்டு வழிபடலாம். அப்படி வழிபட மூன்று முறைகள் உள்ளன. அதில் ஒன்றாவது அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது, 2வது கலசம்வைத்து வழிபடுவது, 3வது முறையாக படம் வைத்து வழிபடுவது.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை மட்டுமாவது தினமும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சக்திதேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வணங்கி வழிபடுகிறோம். லட்சுமி சரஸ்வதி பார்வதி என்று முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால், கொலு வைக்காதவர்கள் அம்பாளை மனதார வேண்டிக் கொண்டு வழிபடலாம்.
முதலாவதாக தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் அகலமாக மண் அகல் விளக்கினை வாங்கி ஊற வைத்து, பின் அதற்கு மஞ்சள், குங்குமம், வைத்து திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். நவராத்திரியின் 9 நாட்களும் அம்பாளின் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும்.
கொலு வைக்காதவர்கள் முப்பெரும் தேவியருக்கு கலசம் வைத்து வழிபடலாம். பொதுவாக அனைவரும் கலசம் வைப்பார்கள். ஆனால், நவராத்திரியின் போது நல்ல நேரத்தில் கலசத்தை நிறுவுவதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இந்த கலவசத்தை மனைப்பலகையில் பச்சரிசி பரப்பி, அதன் மீது வைத்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் துர்கா தேவி மகிழ்ச்சி அடைந்து , நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.
கொலு வைக்காதவர்கள் பூஜையறையில் மூன்று தேவியரின் படத்தை வைத்து தினமும் காலையில் மாலையில் விளக்கேற்றி நைவேத்யம் செய்து வைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனிப்பு வகையை நைவேத்தியமாக வைக்கலாம்.அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு பூ, குங்குமம் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.