உறவுகளில் விரிசலா? சீர் செய்யும் கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

Update: 2021-04-20 00:00 GMT

கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் வருகிற ஒரு நிகழ்வு. எண்களில் ஆறு என்பது ஆறுமுகனின் அடையாளமாகவே கருதப்படுகிறது. உதாரணமாக கந்த சஷ்டி விழா, ஆறு தினங்கள் நடத்தப்ப்படுகின்றன. அவருக்கு ஆறு முகம் உண்டு மற்றும் அவரின் படை வீடுகள் ஆறு. அவருக்கு மிகவும் வலிமை வாய்ந்த 6 எழுத்துகள் "ச ர வ ண ப வ " என்கிற ஆறு மந்திர எழுத்துகள் சொந்தமாய் உள்ளது. மிகவும் முக்கியமாக நம்முடைய ஆறாம் அறிவின் அதிபதியாக விளங்குபவரும் அவரே.

நம்முடைய இந்து வேத மரபில் முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரை வழிபடுவதிலும் அவருக்கான வழிபாடுகள், விரதங்களை கடைப்பிடிப்பதில் நேர்மையான மற்றும் முழுமையான அர்பணிப்பு உணர்வும் இருக்குமாயின் இந்த பலன்களை நாம் பெறுவது நிச்சயம் என்கின்றன சாஸ்திரங்கள்.

குறிப்பாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபடுபவர்கள் பக்தர்கள் வேண்டும் வரங்களை மனதார வழங்குகிறான் கந்தன் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் திருமணத்தடை ஏதும் இருப்பின் நிச்சயம் விலகும். மேலும் தொழில் வாழ்க்கையில் மற்றும் உறவுகளில் ஒருவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஏதும் பிளவு ஏற்பட்டால், கந்த சஷ்டி விரதம் இருந்தால் அவர்களின் உறவு மேம்படும்.

மேலும் கந்த சஷ்டியின் 2ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் நாளில் விரதம் இருந்து வணங்கினால் உங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் விலகும். நேர்மறை ஆற்றல்களின் பால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். 



கந்தர் சஷ்டி யின் 5ஆம் மற்றும் 6 ஆம் நாள் முருகனை வழிபட்டால் ஆன்மீக ரீதியான நற்பயன்களும், பொருளாதார வளர்ச்சியும் மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும்.

கந்த சஷ்டியின் ஆறு நாட்களும் புலால், மது, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை பழங்களை எடுத்து கொள்வது நலம். மேலும் சிவன் மற்றும் பார்வதியை கந்த சஷ்டி விரத நாட்களில் முருகனோடு சேர்த்து வழிபடுவது கூடுதல் சிறப்பு.



முருக பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் முருகனின் திருவுருவச் சிலையை வைத்திருந்தால். அதற்கு புனித நீர் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம். பின் திருவுருவச்சிலைக்கு புத்தாடை அணிவித்து அலங்கரிக்கலாம்.

தவறாமல் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, உங்கள் குறைகளை முருகனின் மனம் உருகி சொல்ல அனைத்தும் சுபமாய் நிகழும் கந்தனின் அருளால்.

Tags:    

Similar News