வீட்டிலுள்ள தீய சக்தியை விரட்ட கல் உப்பு பயன்படுத்துவது எப்படி?

Update: 2022-12-22 12:45 GMT

தூய்மையில் அமைதியிருக்கிறது. தூய்மையில் நேர்மறை அதிர்வு இருக்கிறது. நம் ஆன்மீக செயல்முறையையும், உடல் நலத்தையும் எளிதில் சிதைக்க கூடியது எதிர்மறை அதிர்வுகள். அதை போக்குவதற்கு இயற்கையிடமே நல்ல தீர்வுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் உப்பு. எதிர்மறை ஆற்றலை அழிப்பதில் சிறந்த நிவாரணியாக செயல்படுவது உப்பு. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, நம் ஆரோக்கியத்தையும் முன்னேற்றுகிறது. உப்பு என்பது உடல் அரோக்கியத்தில் மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்திலும், ஆன்மீக செயல்முறைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

உப்பு மிகவும் புனிதமான பொருள் என்பதால், அனைத்து விதமான வழிபாட்டு முறைகள், பூஜைகளிலும் உப்பு இடம் பெறுவதை பார்க்க முடியும். புதிய வீட்டில் குடியேறுகிற போது முதன் முதலில் உப்பை உள்ளே எடுத்து கொண்டு போவார்கள். திருமண சடங்கின் முதல் சடங்காக உப்பு ஜவுளி எனும் சடங்கை செய்வார்கள். காரணம், உப்பு என்பது மங்களகரமான பொருள். லட்சுமி கடாக்ஷம் நிறைந்த பொருள். குறிப்பாக கடல் உப்பு (கல் உப்பு), காரணம் கடல் என்பது மொத்த பிரபஞ்ச சக்தியையும் உள்வாங்கியிருக்கும் இடம். அந்த கடலில் இருந்து உருவாகும் உப்பானது அதீதமான நேர்மறை ஆற்றலை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் எந்த கலப்படமும் இன்றி தூய்மையானதாக, புனிதமானதாக திகழ்கிறது. வீட்டில் தீய அதிர்வுகள் இருந்தால், வீடு துடைக்கும் போது நீரில் சிறிது கல் உப்பை போட்டு வீடு துடைத்து வர வீட்டின் தீய அதிர்வுகள் நீங்கும். உடலில் மிகவும் சோம்பல் இருப்பதையோ அல்லது தீய அதிர்வுகள் இருப்பதையோ உணர்ந்தால் குளியல் நீரில் சிறிது உப்பை கலந்து குளித்து வர உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

வீட்டின் மூலைகளில் சிறிய கிண்ணங்களில் உப்பை இட்டு வைத்தால் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருப்பின் அவை நீங்கும். கண் திருஷ்டி, பொறாமை போன்ற தீய எண்ணங்களில் இருந்து நம்மை காத்து கொள்ள சிவப்பு நிற துணியில் சிறிது உப்பை கட்டி வீட்டின் வாயிலில் கட்டினால் தீய அதிர்வுகளை உப்பு ஈர்த்து கொள்ளும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News