எந்த நேரத்தில் பைரவரை வழிபடுவது மிக நன்மைகளைத் தரும்?
பைரவரை வழிபட சரியான நேரம் மற்றும் வழிபாட்டில் முழு பலனைப் பெறுவது எப்படி?
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனிப்பட்ட விஷய குணங்கள் உள்ளன.கடவுளை வழிபடும் முறைகளும் வெவ்வேறு வகையான அமைந்துள்ளது. அனைத்து நேரங்களிலும் வழிபடும் மற்றும் முழு பலனையும் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அந்த வகையில் தற்பொழுது, பைரவப் பெருமானை விரதம் இருந்து காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபாடு செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த யாவும் உங்களுக்கு கிட்டும். மேலும் மாலையில் வழிபாடு செய்தால் பாவங்கள் விலகும். அதாவது அர்த்த சாமத்தில் வழிபாடு செய்வதன் மூலம் நீங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற முடியும். மேலும் மன ஒற்றுமையும் உங்களுக்கு கிடைக்கும்.
பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல பூசணிக்காயை இரண்டு பாகங்களாக வெட்டி அவற்றினுள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். எப்படி பிற அம்மன் கோவில்களில் எலுமிச்சம் பழம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோமோ? அதே மாதிரி பூசணிக்காயில் தீபம் போட்டு வழிபாடு செய்யலாம்.
மேலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிடித்த மாதிரியான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அந்த வகையில் பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்யலாம். மேலும் பைரவருக்கு ஏற்ற மாலைகளான வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற மலர்கள் செவ்வரளி, மஞ்சள் செவந்தி போன்ற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
Input & Image courtesy: Malaimalar News