வேப்பிலை இந்து மரபில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஏன்? அறிவியல் காரணங்கள்

Update: 2021-03-10 00:15 GMT

வேப்ப மரம் இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத்திற்கு பயன்பட்டு வருகிறது. இன்று இதன் மருத்துவ குணம் நவீன ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேப்ப மரம் இந்தியாவின் கிராம மருந்தாக பயன்படுகிறது. இந்த மரம் ஒரு தெய்வீக மரமாக போற்றப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு இந்த இந்த மரத்தின் பயன்பாடு மிக உதவிகரமாக இருக்கிறது, ரத்தத்தின் சர்க்கரை அளவை மாற்றாமல் 50 விழுக்காடு இன்சுலின் தேவையை குறைகிறது.



வேப்ப மரத்தின் மருந்து பொருட்கள் ரத்தத்தை சுத்திகரித்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது பற்கள் ஈறுகள் வாயின் உட்புரத்தில் ஏற்படும் பாதிப்புகள் எல்லாவற்றையும் வேப்பம் பொருட்கள் குணமாகும். சோரியாசிஸ் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற வற்றிற்கும் இந்த வேப்பம் பொருட்கள் பயன்படும். முடி உதிராமல் நரை வராமல் தடுக்க தேங்காய் எண்ணையுடன் வேப்ப எண்ணையை கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும் மேலும் முடி வெள்ளையாவது தடுக்கப்படும். 



உடலில் ஏற்படும் காயங்களுக்கு வேப்ப என்னை தடவலாம். இந்த வேப்ப எண்ணனை ரத்தத்தில் இருக்கும் கெட்டிப்படுத்தும் பைபர்களளை அதிகப்படுத்துவதால், காயத்தினால் ரத்தப்போக்கு நிற்காமல் இருப்பவர்கள் வெப்ப எண்ணெய் பயன்படுத்தலாம். தீக்காயங்களை கூட இந்த வேப்ப எண்ணெய் குணப்படுத்தும் சக்தி உடையது. தலையில் பொடுகு குறைய இரவில் தூங்குவதற்கு முன் சிறிது வேப்ப எண்ணையை தலையில் தேய்த்து கொண்டு காலையில் எழந்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும், சரக சமிதை சுஸ்ருத சமிதை ஆகிய நூல்களிலும் வேப்ப மரத்தை பற்றி வருகிறது.

வேப்ப மரத்தின் பூ காய்கள் மரப்பட்டைகள் போன்றவை மண்ணிற்கு நல்ல வளத்தை தரக்கூடியவை. எல்லாவற்றையும் விட அம்மை நோய்களுக்கு இந்த வேப்ப மர இலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. வேப்பம் பலம் மூல வியாதிக்கும், சிறுநீர் உபாதைகளுக்கும் பயன்படுகிறது. கடுமையான தோல் நோய்களையும், குஷ்டரோகங்களையும் வேப்பம் பொருட்கள் குணப்படுத்துகின்றன

Tags:    

Similar News