மண்டையோட்டு மாலையுடன் காட்சி தரும் அம்மன்!தாந்த்ரீகத்தில் முக்கிய கோவில்

Update: 2023-03-22 00:30 GMT

சிவபெருமான் பெயரை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ள நகரம் புவனேஸ்வர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇடம். இந்த இடம் தற்போது ஒடிசாவின் தலைநகரமாகும். நூற்றுக்கணக்கான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் புராதன கோட்டைகள் நிறைத இடம். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியும் இடமாக இது உள்ளது. இந்த நகரத்தில் அமைந்திருப்பது தான் பைத்தலா தேலா கோவில்.

இந்த கோவிலுக்கு சுற்றுலா சொல்லும் நபர்கள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதத்திற்கு உள்ளாக செல்லலாம். காரணம் கோடை காலத்தில் இங்கே வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. கலிங்கா சாம்ராஜ்ஜியத்தில் 8 ஆம் நூற்றாண்டில் பைத்தலா கோவில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த கோவில் புவனேஸ்வர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமுண்டா தேவிக்கு அர்பணிக்கபட்டது. இந்த தேவியை தினிமுந்தியா தேலா எனவும் அழைக்கின்றனர். இவரின் உச்சியில் மூன்று கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. இது சாமுண்டா கடவுளிடம் இருக்கும் மூன்று வல்லமையை உணர்த்துகிறது.

இந்த கோவில் இதன் வித்தியாசமான கட்டிட அமைப்பிற்கு பெயர் போனது. ஏராளமான ஒடியா எழுத்துக்கள் கோவிலை சுற்றி பொறிக்கப்பட்டுள்ளன.. கலிங்கா கட்டிடக்கலையின் உச்சமாக இந்த கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வளாகத்தினுள் சிவபெருமான், பார்வதி தேவி, கணபதி ஆகியோரின் திருவுருவங்களை காண முடியும்.

இந்த கோவிலின் சிறப்பு யாதெனில், நாடெங்கும் இருக்கும் தாந்திரீக கோவில்களில் இது முக்கியமானது. மிகவும் வல்லமை வாய்ந்த தாந்திரீக மையமாக இது விளங்குகிறது. இந்த கோவிலின் உள் அமைந்திருக்கும் பிரமாண்ட சாமுண்டா எனும் காளி மண்டைஓட்டை மாலையாக அணிந்திருக்கிறார். திருபதத்தில் ஒருவர் பலியிடப்பட்டு கிடப்பதை போலவும், பக்கவாட்டில் ஆந்தை மற்றும் நரி அமைந்திருப்பது போலவும் இருக்கும் உருவம் பார்க்க மிக உக்கிரமானதாக இருக்கிறது. ஆக்ரோஷமான உருவத்தை கொண்டவர் இந்த அம்பிகை.

இந்த அம்பிகைக்கு 8 கரங்கள் இருக்கின்றன, இவரை காபிலினி எனவும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றன. இந்த கோவில் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது, தாந்திரீகத்தின் முக்கிய அம்சம் என்பதாலோ என்னவோ இந்த கோவிலில் பெருமளவிலான சுற்றுலா கூட்டம் இல்லை. மேலும் இந்த கோவிலின் அதிசயக்கத்தக்க அம்சங்கள் பெரும் வரவேற்பை பெறாமலே இருக்கின்றன.

Tags:    

Similar News