நூடுல்ஸ் மற்றும் சாப்ஸியை பிரசாதமாக வழங்கும் இந்தியாவின் அதிசய சீனா காளி கோவில் !

நூடுல்ஸ் மற்றும் சாப்ஸியை பிரசாதமாக வழங்கும் இந்தியாவின் அதிசய சீனா காளி கோவில் !

Update: 2020-11-13 05:45 GMT

இந்தியாவில் பல தரப்பட்ட கலாச்சாராங்களால் ஆன கோவில்கள் ஏராளம் உண்டு. மேலும் அதனுடைய பழமையான பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெயர் போனது இந்தியக்கோவில்கள். இதில் பல அதிசயங்கள், மர்மங்கள் நிறைந்த கோவில்களும் அடங்கும். சக்தி மிகுந்த கோவில்கள், வரலாற்று முக்கியமான கோவில்கள் எனும் வரிசையில் இன்று நாம் காணைவிருப்பது சுவாரஸ்யமான கோவில்.

கொல்கத்தாவின் தாங்கரா பகுதியில் அமைந்துள்ளது சைனீஸ் காளி கோவில். இந்த கோவில் குறித்த ஒவ்வொரு அம்சங்களும், தகவல்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. கொல்கத்தாவில் அமைந்துள்ள தாங்கரா எனும் பகுதி சைனா டவுன் என செல்லமாக அழைக்கப்படுவதுண்டு . இங்கு சீனாவை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறனர்.

60 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாக இது திகழ்கிறது. இந்தியர்கள் மற்றும் சீனர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கோவில் அமைந்துள்ளது. இன்று கோவில் அமைந்திருக்கும் இடத்தில் 60 வருடங்களுக்கு முன்பு இரண்டு கற்கள் குங்குமம் நிரப்பப்பட்ட  விதத்தில் இங்கு இருந்துள்ளது.

மக்கள் அவ்வப்போது வழிபட்டு வந்துள்ளனர். அப்போது சீன சிறுவன் ஒருவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காத சூழலில் அந்த சிறுவனை இந்த கற்களின் முன்பு வைத்து வழிபட்டுள்ளனர். அதிசயமாக அந்த சிறுவன பிழைக்கவும்.

அன்று முதல் வழிபாட்டு தலமகா இந்த இடம் உருமாறியுள்ளது. இந்த பகுதி முழுவதிலும் புத்தர்களும், கிருஸ்தவர்களும் அதிகம் வசித்தாலும் இங்கே ஏராளமான சீன மக்கள் தினசரி வழிபடுகின்றனர். சில ஆண்டுகள் முன்பு இது கிரானைட் கோவிலாக கட்டப்பட்டது இந்த கட்டுமானப் பணியின் ஒவ்வொரு படிநிலையிலும் சீனர்கள் அளித்த பெரும்பாலான நன்கொடை உள்ளது.

இங்கு இரு காளி உருவ சிலைகள் இருக்கின்றன. ஆதியில் சுயம்புவாக தோன்றிய இரு கற்களும் இன்னமும் இங்கே இருக்கின்றன. பெரும்பாலன வழிபாட்டு முறை இந்து முறைப்படி நடைப்பெற்றாலும், சில சடங்குகள் சீன முறைப்படியும் நடைபெறுகின்றன.

இங்கிருக்கும் மற்றொரு ஆச்சர்ய பழக்கம் யாதெனில், இங்கே புனித பிரசாதமாக நூடுல்ஸும் சாப்ஸியும் வழங்கப்படுவது சீன மற்றும் இந்திய மக்களின் நல்லிணக்கத்திற்கும், கலாச்சார மதிப்பிற்கும் சிறந்த அடையாளமாக திகழ்க்கிறது.

Similar News