இந்தியரின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார கூறுகளை உலகத்தவர் வியந்து பார்ப்பதுண்டு. அந்த வகையில் உலகில் பழம்பெறும் பெருமையும் சிறப்பும் கொண்டது இந்து மரபு. இதில் உள்ள எண்ணற்ற பாரம்பரிய நிகழ்வுகள் உலகில் உள்ள அனைவராலும் போற்றி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் பலரையும் ஆச்சர்யத்தில் உள்ளாக்குவது நாக வழிபாடு.
நாகங்களை நம் மரபில் நாம் வெறும் ஊர்வன என்று மட்டும் கருதுவதில்லை. அதற்கென பிரத்யேக தெய்வீக அம்சங்கள், ஆன்மீக மரபில் ஆழ்ந்த முக்கியத்துவம் உண்டு. நமது புராணங்களில் பாம்புகள் குறித்த ஏராளமான நாட்டுபுற கதைகள், குறிப்புகள் இருப்பதை காண்கிறோம். அந்த வகையில் நம் மரபில் வழிபடப்படும் பாம்பு தெய்வங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
அனந்தா, பிங்கலா, வாசுகி, தக்ஷகா மற்றும் கார்கோட்டகா ஆகிய பாம்புகள் இந்திய புராணங்களில் மிகவும் பிரபலமானவை.
அனந்தா பாம்பிற்கு மற்ற சில பெயர்களும் உண்டு ஷேச நாகம் அல்லது ஆனந்த நாகம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆயிரம் தலை கொண்டு பிரமாண்டமாக இருக்கும் இந்த நாகத்தின் மீது தான் பத்மநாப சுவாமி ஶ்ரீ விஷ்ணு பரமாத்மா பள்ளி கொண்டிருக்கிறார். பகவானோடு காட்சி அளிக்கும் அனந்தனால் இந்த உலகையே உயர்த்தி விட முடியும்.
வாசுகி, இது பாம்புகளுக்கெல்லாம் அரசனாக கருதப்படும் பாம்பு . இதன் தலையில் இருக்கும் ரத்தினத்தை நாகமணி என்று அழைப்பர். பெளத்தம், ஜப்பான் மற்றும் சீன இலக்கியத்திலும் வாசுகி குறித்த குறிப்புகள் உண்டு. மேற்கு வங்கத்தில் மானசா தேவி எனும் அம்பாளை வணங்கும் வழக்கம் உண்டு. அவருடைய சகோதரியே வாசுகி மற்றும் அமிர்தம் எடுக்க மலையை கடைய கயிறாக மாறி பயன்பட்டது வாசுகி தான் என்பது மிக முக்கிய குறிப்பாகும்.
பிங்கலா பாம்புகளின் தலைவன். இந்திய மற்றும் பெளத்த இலக்கியங்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. கலிங்கத்தில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை பாதுகாக்கும் காவலனாக திகழ்வது பிங்கலா தான் என சொல்லப்படுகிறது.