நம் மரபில் சிவப்பு நிறம் புனிதமானதாக கருதப்படுவதன் ஆச்சிர்ய பின்னணி

Update: 2023-03-16 00:00 GMT

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னும் காரண காரியங்கள் உண்டு. அந்தவகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நிறங்களுக்கு என சில முக்கியத்துவம் இருக்கிறது. கறுப்பு, சிவப்பு, மஞ்சள் போன்றவை ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெறும் நிறங்கள். நம் இந்து மரபில் பல்வேறு நிறங்கள் பல்வேறு கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் என்பது மங்களகரமான நிறங்களாக கருதப்படும் சூழலில் சிவப்பு நிறத்திற்கு நம் மரபில் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

சில நேரங்களில் சிவப்பு நிறம் குறிப்பிட்ட அம்சங்களின் குறியீடாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது. நம் மரபில் நிகழும், பண்டிகை, விழாக்கள், சடங்குகளில் சிவப்பு நிறம் பிரதானமாக இருப்பதை நாம் காண முடியும். பொருட்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நம் மக்கள் சிவப்பு நிறத்தை பிரதானமாக தேர்வு செய்வதை காண முடியும். அந்த வகையில் சிவப்பு என்பது அன்பின் நிறம் என பலர் கூறுகிறார்கள். பொதுவாக சிவப்பு நிறம் என்பது சுப மங்களமான நிறம்.

இதனாலயே இன்றும் பல பெண்கள் அவர்களின் திருமணத்தின் போது, ஆடை துவங்கி அணிகிற அணிகலன் வரை பெரும்பாலானவை சிவப்பு நிறத்தில் இருப்பதை காணமுடியும். இது உண்மையை உணர்த்துகிற நிறம் அதுமட்டுமன்றி பார்வதி தேவியின் அம்சமாக இந்த சிவப்பு நிறம் கருதப்படுகிறது. அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் நல்ல அதிர்வுகளையும் ஈர்க்கும் நிறமாக சிவப்பு இருக்கிறது.

இந்த சிவப்பு நிறத்தை நம்முடைய அமைந்திருக்கக் கூடிய நெற்றிப் பகுதியில் அணிவதால் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் அரணாக இந்த சிவப்பு நிறம் விளங்குகிறது. மொத்தத்தில் சிவப்பு நிறம் என்பது ஒரு நேர்மறையான அதிர்வை நமக்குள் செலுத்தி நம்மை நல்ல பாதையில் இயக்கும் ஊக்கு சக்தியாக அமைகிறது.

சிவப்பு இருக்கு பசியைத் தூண்டக்கூடிய தன்மை இருக்கிறது என சிலர் சொல்கின்றனர் அதனால்தான் பல உணவகங்களும் சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை நாம் காணமுடியும் அடையாளமாக சிவப்பு திகழ்கிறது எனவே இதனை அதிகமாக பயன்படுத்துவதைக் காட்டிலும் அளவில் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துவது சிறப்பை தரும்

Tags:    

Similar News