இங்கு வழிபட்டால் விலங்குகளாக மறுபிறப்பு எடுக்கும் பந்தம் அறுந்து போகும் அதிசயம்!
இங்கு வழிபட்டால் விலங்குகளாக மறுபிறப்பு எடுக்கும் பந்தம் அறுந்து போகும் அதிசயம்!
பசுபதிநாதர் ஆலயம், இந்து கோவில்களின் வரிசையில் மிக முக்கியமானது. பாக்மதி ஆற்றங்கரையில் நேபாளத்தின், காத்மண்டுவிலிருந்து கிட்டதட்ட 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில். 1979 ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது. மேலும் 275 தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாக இக்கோவில் உள்ளது. இன்னும் சொன்னால், இந்த ஆசிய கண்டத்திலேயே மிக முக்கியமான சிவன் கோவில்.
இந்த கோவில் ஐந்தாம் நூற்றாண்டில் லிச்சவி அரசரான பிரச்சந்த தேவ் அவர்களால் உருவாக்கப்பட்டது. கால ஓட்டத்தில் இந்த கோவிலை சுற்றி பல சிறு சிறு கோவில்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த கோவில் வளாகத்தினுள் வைஷ்ணவ கோவில் வளாகமும் உள்ளது. பசுபதி நாதர் ஆலயம் என்பது காத்மண்டூவின் மிக பழமையான கோவிலாகும்.
புராணங்களின் படி சிவபெருமானும் பார்வதியும் மான் வடிவம் எடுத்து பாக்மதி ஆற்றின் நதிகரை ஓரத்தில் இருக்கும் காடுபகுதியில் சுற்றி வந்தனர். அப்போது ஏற்பட்ட நிகழ்வில் மானின் கொம்பு உடைந்து விழுந்தது. அந்த கொம்பு தான் சிவலிங்கமாக வழிபடப்பட்டு வந்துள்ளது ஆனால் காலம் செல்ல செல்ல அந்த லிங்கம் மறைந்துவிட்டது. பல நூற்றாண்டுகள் கழிந்து ஒரு மாடு மேய்பன் தன்னுடைய பசு ஒரு இடத்தில் தானாக பால் சுரப்பதை கண்டு ஆச்சர்யமுற்று அங்கே தோண்டி பார்த்த போது அங்கே பசுபதிநாதர் திருவுருவம் இருந்துள்ளது. பசுபதி என்பது பசுக்களின் அதிபதி எனவும் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்த கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான யாத்ரீகள் வருகை புரிகின்றனர். மேலும் இறைவன் இந்த கோவிலில் பசுபதி நாதராக இருப்பதால் அவர்கள் விலங்குகளின் அதிபதி எனவும் கருதப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு விலங்குகளாக மறுபிறப்பு எடுக்கும் வாய்ப்பு அறுந்து போகிறது நம்பிக்கை. அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிற காமதேனு பசு இங்குள்ள சந்திரவன மலை குகையில் இருந்ததாகவும் . தினசரி காமதேனு இறங்கி வந்து லிங்கம் புதைந்திருந்த மணலின் மீது பாலை சுரந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தினுள் தற்போது 518 கோவில்கள் உள்ளன. நேபாள கட்டிடக்கலையான பகோடா அமைப்பில் இங்கே கோவில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலை நேபாளத்தின் காவலர்கள் காக்கின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநிடுக்கத்தின் போது கூட இந்த கோவிலின் முக்கிய பிரகாரம் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பது ஆச்சர்யம்.